Biggboss-ல் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஜனனி.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதன்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார் ஜனனி. இந்த வீடியோவை பல லட்சம் மக்கள் பார்த்திருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 6ல் இலங்கையை சேர்ந்த ஜனனி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் .ஆரம்பத்தில் மிக சுறுசுறுப்பாக விளையாடி வந்த அவர் ஒரு கட்டத்தில் நண்பர்கள் வட்டத்தை சுருக்கி கொண்டு அவர்களுடனே நேரத்தை செலவிட்டு வந்தார். தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னுடைய நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காக அவர் போட்டிகளில் பல இடங்களில் விட்டுக் கொடுத்தார். இது ஜனனி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இலங்கையிலிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்படி இருக்கிறீர்கள் என்று ஜனனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர் .வீட்டில் உள்ளவர்களுக்கும் இதே எண்ணம தோன்ற இதை ஜனனியிடமே வெளிப்படையாகவே கூறத் தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Biggboss-ல் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஜனனி.! 1
ஆனால் நான் அப்படி இல்லை நான் எனக்காக தான் விளையாடுகிறேன் யாருக்காகவும் நான் விளையாடவில்லை என்று தொடர்ந்து ஜனனி கூறி வந்தார். ஒரு கட்டத்தில் கமலே அமுதவாணன் மற்றும் ஜனனி குறித்து பேசும் பொழுது அங்கு அமர்ந்திருக்கும் ரசிகர்கள் கைதட்டி தங்களது ஆரவாரத்தை தெரிவித்தனர். இருந்தபோதிலும் ஜனனி அமுதவாணன் நட்பு நீடித்துக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் பொறுத்து பார்த்து ரசிகர்கள் குறைவான வாக்களித்து ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றினார். கடந்த வாரம் நடந்த வெளியேற்றத்தின் போது ஜனனி வெகுளித்தனமாக நடந்து கொண்டார். அதை பார்த்த பலருக்கும் மனம் மாறியது. ஜனனியின் குழந்தைத்தனமான பேச்சும் அவரது செயலும் பலருக்கும் கண்களில் நீர் வரவழைத்தது. இந்த பெண்ணை நாம் இவ்வாறு எலிமினேட் செய்து விட்டோமே என்று பலரும் கமெண்டில் தெரிவித்து வந்தனர். வெளியேறிய பின்பு ரசிகர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஜனனி பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீனா இருந்தா வீட்டில் நான் இருக்கமாட்டேன்..! வெளியேறிய விஜயா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

Biggboss-ல் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஜனனி.! 3
இந்த நிலையில் ஜனனி இன்று முதல்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். அதில் ஹவுஸ் மேட்ஸ் குறித்து பல தகவல்களை ஜனனி பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக ஷிவின் ஒரு பாம்பு மற்றும் முதலை போன்றவர் என்றும், அசீம் ஒரு கழுகு போன்றவர் என்றும் அவர் பேசியிருக்கிறார். மேலும் நீங்கள் இல்லாத பிக்பாஸை பார்க்கவே பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்ய, அப்படியே இருந்து விடுங்கள் பார்க்காதீர்கள் என்று விளையாட்டாக பதிலளித்தார் ஜனனி. மேலும் தான் வெளியே வந்த பின்னர் எனக்கு என்னுடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவ்வளவு ஆறுதலாக இருந்தீர்கள் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் அவர் பேசி இருக்கிறார். நீங்களும் ஜனனியின் வீடியோவை காண. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment