விஜய் டிவி எளிய பின்னணியில் இருந்து வரும் பலருக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் தங்களது வாழ்க்கையை தொடங்கிய பலர் இன்று வெள்ளித்திரையில் பிரபலங்களாக, நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடிய பலரும் இன்று இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் ஆகியோரின் குழு இசையில் பாடத் தொடங்கி தற்போது தனியாக பாடல் பாடும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். பலர் சில படங்களிலும், ஆல்பங்களிலும் பாடி வருகின்றனர். அப்படி எளிய பின்னணியில் இருந்து வந்து புகழை அடைந்துள்ள ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளாரக கலந்து கொண்டார். சமீபத்தில் திருமணம் முடிந்த அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதை instagram பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தார்.



சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அஜய் கிருஷ்ணா. இவருக்கு ஒரு தனித் திறமை உண்டு. பேசுவதில் மிமிக்ரி செய்ய முடியும், ஆனால் பாடுவதை மிமிக்ரி செய்வது சிறிது கஷ்டமான காரியம். ஆனால் அஜய் கிருஷ்ணாவோ பிரபல பாடகர் உதித் நாராயணன் போலவே பல பாடல்களை பாடி மிமிக்ரி செய்துள்ளார். ஒருமுறை எஸ்பிபி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த போது எஸ்பிபியின் பாட்டை உதித் நாராயணன் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று பாடி காட்டினார். அதை கேட்ட எஸ்பிபி ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நான் உதித்தை மீண்டும் ஒருமுறை சந்தித்தால் உன்னை மிமிக்ரி செய்யும் ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்று கூறுவேன் என அஜயிடம் எஸ்பிபி கூறியிருந்தார்.



அந்த அளவிற்கு திறமையான ஒரு பாடகர் அஜய் கிருஷ்ணா. பின்னர் இவர் ஸ்டார் மியூசிக் என்னும் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா கடந்த மே மாதம் ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 5 மாதங்கள் முடிந்தபோது தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் instagram-யில் பகிர்ந்து இருந்தார். அதன் பின்னர் அவர் பெரிய அளவில் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் போது கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை அஜய் பகிர்ந்து இருக்கிறார். அதில் நிறைமாத கர்ப்பிணியாக ஜெஸ்ஸி இருக்கிறார். அஜய் மற்றும் ஜெசி தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.