சுஷாந்த் சிங் மரணத்தில் அதிரடி திருப்பம்.! 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்.!

பிரபல பாலிவுட் நடிகராக இருந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டு தான் இறந்திருக்கிறார் என்று சுஷாந்தின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த நபர் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார் சுஷாந்த். அந்த படத்திற்குப் பின்னர் அவருக்கு நாடு முழுவதிலும் ரசிகர்கள் பெருகினர். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த நபர் அது கொலை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

சுஷாந்த் சிங் மரணத்தில் அதிரடி திருப்பம்.! 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்.! 1

விளம்பரம்

சுஷாந்த் சிங்கும் நடிகை ரியாவும் காதலித்து வந்தனர். இதனால் சுஷாந்தின் இறப்புக்கு ரியாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சுஷாந்த் மனநல மருத்துவரிடமும் சிகிச்சை எடுத்து வந்திருந்தார். அவர் போதை மருந்து பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. சுஷாந்தின் தந்தை, நடிகை ரியா தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர்தான் தன் மகனுக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ரியா மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு 24 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வெளியே வந்தனர். மேலும் இதில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரேவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆதித்யா தாக்ரேவிடமிருந்து ரியாவுக்கு 44 முறை போன் சென்றுள்ளதாக தகவல்களும் வெளியானது.

தொடர்புடையவை  சில்லாஞ்சிறுக்கியே..! என்னை கொல்லுற அரக்கியே..! லப்பர் பந்து படத்தின் Video Song இதோ..!

சுஷாந்த் சிங் மரணத்தில் அதிரடி திருப்பம்.! 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்.! 3
இந்த நிலையில் சுஷாந்த் சிங் இறப்பில் திடீர் திருப்பமாக அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்த ரூப் குமார் ஷா என்பவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர் அவர் உடலை பார்த்தபோது அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது. அன்று 5 இறந்த உடல்கள் கூப்பர் மருத்துவமனைக்கு வந்தது. அந்த உடலை உடற்கூராய்வு செய்த போது ஒரு உடல் விஐபி உடையது என்றும் அது சுஷாந்த் உடையது என்றும் தங்களுக்கு தெரிய வந்ததாகவும் பேசினார். மேலும் அவனது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக கழுத்தில் மட்டுமே இரண்டு முதல் மூன்று மார்க்குகள் இருந்தன. இதை பார்த்த உடனே என்னுடைய உயர் அதிகாரியிடம் இது கொலையாகத்தான் இருக்க வேண்டும் தற்கொலையாக இருக்க முடியாது என்று கூறினேன். உடற்கூறாய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில், அதிகாரிகள் புகைப்படங்களை மட்டுமே எடுக்கச் சொன்னார்கள். அதனால் தாங்களும் புகைப்படங்களை மட்டுமே எடுத்தோம். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம் என்று உடற்குறைவு செய்த ரூப் குமார் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சகுனி பட நாயகி ப்ரணீதாவின் இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சி..! கலந்துகொண்ட உறவினர்கள்..! ரசிகர்கள் வாழ்த்து..!

சுஷாந்த் சிங் மரணத்தில் அதிரடி திருப்பம்.! 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்.! 5
ரூப்குமாரின் இந்த பேட்டி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுஷாந்தை கொலை செய்தது யார்? அதற்கு என்ன காரணம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் அவரை கொலை செய்திருக்க கூடும் என்ற பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. மேலும் ரூப் குமாரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி உண்மைகளை வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் மீண்டும் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான விசாரணை பாலிவுட்டில் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment