43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.!

15 ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்து இருப்பதை instagram-ல் புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார் நடிகர் நரேன். இன்று தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அஞ்சாதே என்கிற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் நரேன். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பின்னர் இவர் அஞ்சாதே, தம்பிக்கோட்டை, யூ டர்ன், பள்ளிக்கூடம் நெஞ்சிருக்கும் வரை, கைதி, விக்ரம் என பல படங்களில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான, மிகப்பெரிய வெற்றி படமான விக்ரம் படத்தில் நிறைய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.! 1

விளம்பரம்

43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.! 3

சிறப்பான நடிப்பால் பலரின் மனங்களைக் கவர்ந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கேரளாவை பூர்விகமாக கொண்ட நரேன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பின்னர் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த அவர் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு கத்துக்குட்டி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு திரும்பி இருக்கிறார். விக்ரம் படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2008ம் ஆண்டு தன்மையா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  "சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!"

43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.! 5

43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.! 7

விளம்பரம்

தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நரேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில், தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தார். குழந்தை தனது கையைப் பிடித்து இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இருந்தார். திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து தனது 43வது வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறார் நரேன்.! இந்த நிலையில் இன்று மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார். ஓம்கார் நரேன் என்று மகனுக்கு பெயர் வைத்துள்ளதாகவும் அவர் அறிவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment