இது என்ன காபி இவ்ளோ கன்றாவியா இருக்கு.! ராதிகாவை பங்கம் செய்யும் ராமமூர்த்தி தாத்தா.!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராமமூர்த்தி தாத்தா கோபி மற்றும் ராதிகாவை படுத்தியெடுக்கும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி பாக்யா, இரண்டாவது மனைவி ராதிகா. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார் கோபி. ராதிகாவிற்கு அவ்வளவாக சமைக்கத் தெரியாது. இதனால் ராதிகாவுடன் வாழ்க்கையை தொடங்கிய கோபி ஆரம்பம் முதலே கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது கோபியுடன் அவரது மகள் இனியாவும் வந்துவிட, தாத்தா ராமமூர்த்தியும் கோபியுடனே வசிக்க கிளம்பி வந்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது என்ன காபி இவ்ளோ கன்றாவியா இருக்கு.! ராதிகாவை பங்கம் செய்யும் ராமமூர்த்தி தாத்தா.! 1

விளம்பரம்

 

ஆனால் ராமமூர்த்தி எப்போதும் ராதிகா வீட்டில் சாப்பிடாமல் எதிர் வீட்டில் இருக்கும் மருமகள் பாக்யா வீட்டில் தான் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென இன்று ராமமூர்த்தி தாத்தா ராதிகா வீட்டில் சாப்பிட முடிவெடுத்திருக்கிறார். அப்போது ராதிகாவை அவர் வம்பிழுக்கிறார். காலையில் எழுந்தவுடன் காபி கேட்கும் ராமமூர்த்தி தாத்தாவிற்கு ராதிகா காபி போட்டு கொண்டு வருகிறார். அதை கொடுத்துவிட்டு இது காபியா இல்லை கசாயமா நன்றாகவே இல்லை என்று வம்பு செய்கிறார் ராமமூர்த்தி தாத்தா. பின்னர் காலை உணவுக்கு என்ன டிபன் என்று கேட்கிறார். அதற்கு ராதிகா பிரட் என்று பதில் அளிக்கிறார். பிரட் எல்லாம் பேக்கரியில் இருக்கிற ஐட்டம், எனக்கு பொங்கல் வடை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இதனால் ராதிகா கடுப்பாகிறார். கோபி திரு திருவென முழிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் மணிக்காக விளையாடும் ரவீனா.! கடும் கோபத்தில் கத்தும் நிக்சன்.! ரவீனா செய்வது சரியா?

இது என்ன காபி இவ்ளோ கன்றாவியா இருக்கு.! ராதிகாவை பங்கம் செய்யும் ராமமூர்த்தி தாத்தா.! 3

 

விளம்பரம்

 

இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக ராமமூர்த்தி தாத்தா தனது ஆட்டத்தை ஆரம்பித்து கோபியிடம் இருந்து ராதிகாவை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment