பாரதிகண்ணம்மா சீரியல் குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாடி இருப்பதால் இந்த சீரியல் முடிவடைந்து விட்டதா? என்று ரசிகர்கள் கேள்விகளுக்கு வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்த நிலையில் நாடகம் முடிந்துவிட்டதோ? என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் பாரதி கண்ணம்மா. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த தொடர் 5 வருடங்களை நிறைவடைந்து இருக்கிறது. இந்தத் தொடரில் ஆரம்பத்தில் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்த சீரியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. பின்னர் ரோஷினி சில தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார் அப்போதே இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் குறைய தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இவரும் ரோஷினி போலவே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பாரதிக்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே இல்லை என்று ஒரே ட்விஸ்ட்டை இத்தனை வருடங்களாக வைத்து கதையை இழுக்க ஆரம்பித்தனர். பின்னர் ரசிகர்களே புலம்பத் தொடங்கினர். தயவுசெய்து சீரியலை முடித்து விடுங்கள் இழுக்காதீர்கள் என்று கெஞ்சி வந்தனர். ஆனால் இயக்குனர் சீரியலை முடிப்பதாகவே தெரியவில்லை. கதை எங்கெங்கோ நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கண்ணம்மா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான கிராமத்திற்கே சென்று விடுகிறார். அங்கு அவர்களை தேடி வரும் பாரதி அவர்களை சமாதானப்படுத்துவதற்காக ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடும் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் சீரியல் முடிந்து விட்டதோ என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் உண்மையில் அது பாரதி கண்ணம்மா ஆயிரமாவது எபிசோடை நிறைவு செய்து இருக்கிறது. அதற்காகத்தான் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.! Watch the video below..!