செம்ம ஐடியா பாக்கியா.! நீங்க தைரியமா ஆரம்பிங்க.! இனிமே எல்லாமே வெற்றி தான் உங்களுக்கு.!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தற்போது தான் நடத்தி வரும் கேட்டரிங் மசாலா கம்பெனியிலேயே ஒரு உணவகம் அமைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பாக்யாவிற்கு நாளுக்கு நாள் அடி மேல் அடி விழுந்து கொண்டே வருகிறது. அவர் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தின் கேண்டீன் கான்டிராக்ட்டை பிடிப்பதற்காக முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் பைனான்ஸில் ஏழு லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதில் சமைப்பதற்கு தேவையான நிறைய பாத்திரங்களையும் வாங்கி விட்டார். கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவர் இவ்வாறு செய்துவிட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் கேண்டீன் காண்ட்ராக்ட் கைநழுவி போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் பாக்யா கணவர் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா செய்த சதிதான். ராதிகா வேலை பார்த்து வரும் கம்பெனியில் தான் பாக்கியாவிற்கு கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம ஐடியா பாக்கியா.! நீங்க தைரியமா ஆரம்பிங்க.! இனிமே எல்லாமே வெற்றி தான் உங்களுக்கு.! 1

விளம்பரம்

 

ராதிகா அந்த கம்பெனியின் ஓனரிடம் சென்று பாக்யா குறித்து தப்பு தப்பாக சொல்லி காண்ட்ராக்டை கேன்சல் செய்துவிட்டார். பாக்யா அவ்வளவு பெரிய சமையல் நிபுணர் எல்லாம் கிடையாது, அவர் சின்ன சின்ன விசேஷங்களுக்கு தான் சமைத்துக் கொடுக்கிறார். அவரைப் பற்றிய நல்மதிப்பே இல்லை என்று தவறாக சொல்லிக் கொடுத்து பாக்கியாவிற்கு கேன்டீன் கான்டிராக்ட் கிடைக்காமல் செய்துவிட்டார் ராதிகா. இந்த நிலையில் பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். மேலும் பைனான்ஸில் வாங்கிய ஏழு லட்ச ரூபாயை எப்படி திருப்பிக் கொடுப்பது என்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தான் வாங்கி வைத்த பாத்திரங்களை வைத்து என்ன செய்வது என்று தெரியாமலும் அவர் திணறிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு தற்போது ஒரு ஐடியா கிடைத்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  கயல் சீரியல் நடிகை சைத்ராவின் 30-வது பிறந்தநாள்.! செம்ம சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்.! இதோ வீடியோ.!

செம்ம ஐடியா பாக்கியா.! நீங்க தைரியமா ஆரம்பிங்க.! இனிமே எல்லாமே வெற்றி தான் உங்களுக்கு.! 3

இது குறித்து ஜெனி மற்றும் செல்வியிடம் அவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார். அதில் பாக்யா நடத்தி வரும் ஈஸ்வரி மசாலா கம்பெனியிலேயே உணவகம் ஒன்றை தயார் செய்து அங்கு இந்த பாத்திரங்களை பயன்படுத்தி உணவு சமைத்து ஹோட்டல் போல் நடத்தலாம் என்று பாக்யா ஐடியா கூறுகிறார். அதற்கு ஜெனியும் ஆதரவு கொடுக்கிறார். இங்கெல்லாம் வைத்தால் ஓடுமா என்று தெரியவில்லை என்று செல்வி சொல்கிறார். ஆனால் ஜெனியோ ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூற, மூவரும் சேர்ந்து இந்த ஐடியாவிற்கு ஓகே சொல்கின்றனர். இதனால் அடுத்ததாக பாக்யா உணவகம் ஒன்றை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment