சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுளாரா தனா? ஹாட்ஸ்டார் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இத்தனை நாள் ஆகியும் ஒரு பதிவை கூட போடாமல் தனலட்சுமி இருப்பதால் அவர் சீக்ரெட் ருமில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த தகவலை மேலும் சந்தேகிக்கும் வண்ணம் ஹாட் ஸ்டார் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தவர் தனலட்சுமி. இவர் இந்த சீசன் ஆரம்பித்தது முதலில் சண்டை சச்சரவு என்று இருந்து வந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல இடங்களில் சுவாரசியத்தை கூட்டி இருப்பதாக கமலஹாசனே தனலெட்சுமி வெளியேறிய போது கூறியிருந்தார். இவர் வெளியேற்றத்தின் போது இது ஒரு நியாயமற்ற முறையிலான வெளியேற்றம் என்றும் பலரும் தனலட்சுமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஒரு சிறந்த போட்டியாளரை வெளியே அனுப்பியது தவறு என்றும் தனலட்சுமி ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுளாரா தனா? ஹாட்ஸ்டார் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 1

விளம்பரம்

பிக்பாஸ் வீட்டினுள் கன்டென்ட் கொடுக்கும் ஒரு பெண்ணாக இருந்து வந்தவர் தனலட்சுமி. சாதாரண பொது மக்களில் இருந்து ஒருவராக பிக்பாஸுக்குள் நுழைந்து பலரின் மனங்களை கொள்ளையடித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் மாட்டிய அவரை , குறைந்த வாக்குகள் வாங்கிய காரணத்தினால் பிக்பாஸ் வெளியேற்றி இருந்தது. ஆனால் மைனா, கதிரவன், ரட்சிதா போன்ற பல கண்டன்ட்டே கொடுக்காத ஆட்கள் உள்ளே இருக்கும் நிலையில் சிறப்பாக கன்டன்ட் கொடுத்து வந்த தனலட்சுமியை வெளியே அனுப்பியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று பொதுமக்கள் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அனைவரும் முதலில் ஒரு பதிவு ஒன்றை போடுவார்கள். அதன் பின்னர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் எடுக்கப்படும் லைவ் வீடியோவில் வந்து பேசுவார்கள். ஆனால் தனலட்சுமி வெளியேறி மூன்று நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் இல்லை.

தொடர்புடையவை  கணவருடன் ஹனிமூன் சென்ற ரித்திகா.! மாலத்தீவில் இருந்து ரித்திகா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுளாரா தனா? ஹாட்ஸ்டார் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 3

விளம்பரம்

 

தனலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்த போது அவர் எந்த பதிவையும் போடவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தனது தாயை சந்திக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. பொதுவாக வெளியேறும் ஹவுஸ்மேட்ஸ் அடுத்த நாளே ஏதாவது ஒரு பதிவை போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் தனலெட்சுமியின் பதிவு வராமல் இருப்பது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. தொடர்ந்து அவர் சீக்ரெட் ரூமில் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் பலரும் கிளப்பி வந்த நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒரு விளக்கம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனலட்சுமி உடன் எங்களால் லைவ் வீடியோவிற்கு செல்ல முடியவில்லை. இந்த தடங்கலுக்கு வருந்துகிறோம். தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளை உங்களுக்கு அப்டேட் செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

விளம்பரம்

சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுளாரா தனா? ஹாட்ஸ்டார் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 5 சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுளாரா தனா? ஹாட்ஸ்டார் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.! 7

இதனால் அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டிருக்க கூடும் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment