தற்போது தான் படத்தில் இருந்து சிலவற்றை பார்த்ததாகவும் படம் குறித்தும் ஒரு ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார் துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் வங்கிக் கொள்ளையை பற்றிய படம் என்பது மட்டும் ஓரளவிற்கு தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். இது அஜித்குமாருக்கு 61 வது படமாகும். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தளபதி விஜயின் வாரிசு வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்குமார். இந்த நிலையில் துணிவு குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா என்கிற பாடலும், காசேதான் கடவுளடா என்ற பாடலும் கேங்ஸ்டா என்று மொத்தம் மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தில் இருந்து சிலவற்றை பார்த்து விட்டதாகவும் நிறைய வெடிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா தற்போது இணையத்தில் twitter-ல் கருத்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவை ஷேர் செய்யும் பலர் இது துணிவு படத்தைக் குறித்து தான் இவ்வாறு போட்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அஜித் படங்கள் வெளியாகும் தினம் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே. இந்த நிலையில் நீர்வ்ஷா இவ்வாறு குறிப்பிட்டிருப்பது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்திருக்கிறது. பலரும் அந்த ட்வீட்டை ஷேர் செய்து வருகின்றனர்.!
