பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள விக்ரமன் வெளியேறிய பிறகு தற்போது முதல் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் விக்ரமனை அவரது ரசிகர்கள் மாலை மரியாதை போட்டு வரவேற்பு அளித்திருக்கின்றனர். மேலும் நேராக வீட்டிற்கு சென்றுள்ள விக்ரமன் அம்பேத்கர் படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்து இருக்கிறார். அந்த வீடியோக்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 6 இல் இந்த முறை முதல் முயற்சியாக அரசியல்வாதி ஒருவரை களம் இறக்கி இருந்தார்கள். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் ஒரு போட்டியாளராக களம் இறங்கினார். இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் நடிகராகவும் நடித்திருக்கிறார். EMI தவணை முறை வாழ்க்கை என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் விக்ரமன். அதன் பின்னர் இவர் நடித்த ஒரு நாடகம் சுமார் 30 எபிசோடுகளுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டது அதன் பின்னர் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர் அரசியல் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இந்த கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக இருந்தார் விக்ரமன். மேலும் வட இந்தியாவில் நடத்தப்படும் ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு அவரது கட்சி சார்பாகவும் தமிழ்நாடு சார்பாகவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதலே அமைதியாகவும் யாரையும் தாழ்த்தி பேசாமலும் அமைதியான முறையில் விளையாடி வந்தார் விக்ரமன். இதனால் பலருக்கும் விக்ரமனை பிடித்திருந்தது. விக்ரமன் தான் டைட்டிலை ஜெயிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மற்ற போட்டியாளர்கள் விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் சிக்ஸின் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அசீம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் இரண்டாவது இடத்தையே பிடித்திருந்தார் மேலும் திருநங்கையான ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். அசீமுக்கு முதலிடம் கிடைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் விக்ரமன் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் விக்ரமனுக்கு மாலை மரியாதை போட்டு அழைத்துச் செல்கிறார்கள் நண்பர்கள். அப்போது அவரது வீட்டில் இருக்கும் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்கின்றனர். அங்கு அவர் ஜெய் பீம் என்று கோஷம் போடுகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.0