வெளிநாட்டில் இருந்து திரும்பிய ராதிகா சரத்குமார் தனது பேரப்பிள்ளைகளைப் பார்த்தவுடன் சிறு குழந்தை போல் குதித்து விளையாடும் வீடியோவை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் வெளிநாட்டில் இருந்து திரும்பும் அவரிடம் குழந்தைகள் என்ன வாங்கிட்டு வந்த பாட்டி? என்று கேட்டு அவரை அன்புத் தொல்லை செய்கின்றனர். அந்த அன்பு தொல்லையை முன் கூட்டியே தெரிந்து கொண்ட ராதிகா, அவர்களுக்காக ஏற்கனவே பல பொருட்களை வாங்கி வந்துள்ளார். உடைகள், விளையாட்டு பொருட்கள் என்று ஒரு சூட்கேஸ் நிறைய வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா, இவர் 1978 ஆம் ஆண்டு முதன்முறையாக படங்களில் நடித்த தொடங்கினார். இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர் 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதிகளுக்கு ராகுல் என்கின்ற மகன் ஒருவரும் இருக்கிறார். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரயான் என்கின்ற மகள் இருக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ராதிகா. ராதிகா வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்து பலரின் மனங்களை கவர்ந்திருக்கிறார். தற்போது பல படங்களில் அம்மா வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ராடன் மீடியா என்கின்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் அவரும் அவருடைய கணவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி, போன்ற பல நாடகங்களை தயாரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ராதிகா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் ராதிகாவை பார்த்ததும் அவரது பேரபிள்ளைகள் துள்ளிக் குதிக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து சிறு குழந்தை போல் ராதிகாவும் துள்ளிக் குதிக்கிறார். மேலும் பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் ஊரிலிருந்து என்ன வாங்கிட்டு வந்தாய்? என்பதை போல் கேட்க அவரும் தான் வாங்கிட்டு வந்த பொருட்களை மற்றும் ஆடைகளை அவர்களிடம் கொடுத்து அதை அழகிய வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். மேலும் நம்முடைய வாழ்க்கை நம் குழந்தைகளின் மகிழ்ச்சி தான். வயதாகி விட்டதை பற்றி கவலைப்படாதீர்கள், வயதை நினைத்தும் கவலைப்படாதீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O