பொங்கலுக்கு வெளியான வாரிசு படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த பொங்கல் துணிவு பொங்கலா? அல்லது வாரிசு பொங்கலா? என்று ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதமே எழுந்து வரும் நிலையில் தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு 5 நாள் முடிவின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான படம் தான் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று தொடங்கி படம் வெளியான ஜனவரி 11 முதல் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். அதேபோல் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தை கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் துணிவு படம், வாரிசு உடன் நேரடியாக மோதி இருந்தது.

படம் வெளியான அன்று தொடங்கி இன்று வரை எத்தனை கோடி வசூலை குவித்து இருந்தது என்கிற ஆர்வம் மக்களிடையே எழுந்து வந்தது. முதல் நாளே சுமார் 19 கோடி வசூலை கொடுத்திருந்தது துணிவு படம். ஆனால் வாரிசு 17 கோடி வசூலை தான் பெற்றிருந்தது. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது துணிவு படத்திற்கு ஒரு காட்சி அதிகமாக கிடைத்தது தான் என்று கூறப்பட்டது. பின்னர் தொடர்ந்து துணிவு படம் தமிழகத்தில் வசூலில் முன்னிலை வகுத்து வந்தது. வாரிசு படம் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் உலக அளவில் வசூலை ஒப்பிடும்போது வாரிசு படம் தான் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் யார் எத்தனை கோடி வசூலை பெற்று இருக்கிறார்கள் என்று அப்டேட்டுகள் தினமும் வெளியாகி வந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் படக்குழுவே அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.


தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்திருக்கும் வாரிசு படக்குழு இன்று வரை 150 கோடியே வசூலை வாரிசு பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த போஸ்டரை தற்போது விஜய் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். ஐந்து நாட்களில் 150 கோடி வசூலை பெற்றிருக்கிறோம் நண்பா என்று பதிவிட்டு இருக்கின்றனர் மேலும் ஆட்டநாயகன் விஜய் தான் என்றும் அந்த புதிய போஸ்டரை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ. தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து இருக்கிறது. இதனால் விரைவில் துணிவு படத்தின் ஐந்து நாள் வசூலையும் அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் யார் உண்மையான பொங்கல் வின்னர் என்பது தெரிய வரும்.!