வா சித்தி ஒரு டான்ஸ் போடலாம்.! சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய அர்ச்சனா மகள் சாரா.!

பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் மகள் சாரா தற்போது தனது சித்தியுடன் சேர்ந்து பாவாடை தாவணையில் ஆடி இருக்கும் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் சிட்டிபாபு உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பின்னர் இவர் சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக சுமார் 20 வருடத்திற்கும் மேலாக இருப்பது என்பது சாதாரண காரியமில்லை. அதை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார் அர்ச்சனா. தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஜீ தமிழில் இருந்த இவரை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு இழுத்து வந்தது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வா சித்தி ஒரு டான்ஸ் போடலாம்.! சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய அர்ச்சனா மகள் சாரா.! 1
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அர்ச்சனாவை வெறுப்பவர்கள் அதிகமாகினர். அங்கு இருக்கும்போது “அன்பு ஜெயிக்கும் என்று நீ நம்புறியா?” என இவர் கேட்டது மிக வைரலானது? அன்றிலிருந்து இன்றுவரை அர்ச்சனாவை அன்பு கேங் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். நெட்டிசன்கள். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்த அர்ச்சனா மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பி விட்டார். விஜய் டிவியும் ஜீ தமிழும் போட்டி தொலைக்காட்சிகள் என்பதால் இவர்களுக்குள் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் மீண்டும் அர்ச்சனாவை தன் வசம் இழுத்துக் கொண்டது ஜீ தமிழ். மேலும் அர்ச்சனாவின் பெயர் கெட்டுப் போனதற்கு காரணம் பிக்பாஸ் தான் என்றும் அர்ச்சனாவின் மகள் சாரா பேசியிருந்த வீடியோவும் வைரலானது. அர்ச்சனாவின் மகள் சாரா வயதுக்கு அதிகமாக பேசுகிறார் என்கிற விமர்சனமும் இருந்து வருகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அர்ச்சனாவும் சாராவும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  தமிழுக்கும் சரஸ்வதிக்கும் டாக்டர் சொன்ன குட் நியூஸ்.! கோதை வீட்டுக்கு அடுத்த வாரிசு வரப் போகுது.!

வா சித்தி ஒரு டான்ஸ் போடலாம்.! சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய அர்ச்சனா மகள் சாரா.! 3
குறிப்பாக இவர்கள் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ மிக வைரலானது. அதன் பின்னர் இவர்கள் வீடியோக்கள் வெளியிடுவதை சற்று குறைத்து இருக்கின்றனர். மேலும் சாராவையும் பலரும் விமர்சித்து வந்த நிலையில் அவரும் தற்போது அமைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அர்ச்சனாவின் மகள் சாரா அவரது சித்தி அனிதாவும் இணைந்து பொங்கலுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் புடவை ஒன்றை கட்டிக்கொண்டு சாராவும் அவரது சித்தி அனிதாவும் பஞ்சாபி பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment