அட நம்ம சிவாங்கியா இது? பரதநாட்டியம் ஆடி ரசிகர்களை சொக்க வைத்த சின்னத்திரை ஹாசினி.!

சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கி தற்போது பரதநாட்டியம் ஆடி அந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சூப்பர் சிங்கர் என்று நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் சிவாங்கி கிருஷ்ணமூர்த்தி. இவரது தாய் பின்னி பிரபல பின்னணி பாடகி ஆவார். சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலை பாடியவர் தான் பின்னி. அம்மா போலவே இசைத்துறையில் சாதிக்க நினைத்த சிவாங்கிக்கும் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சிவாங்கி மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. அவர் பேசும்பொழுது ஒரு குரலாகவும், பாடும் பொழுது வேறு ஒரு குரலாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் சிவாங்கியை கலாய்த்து வந்தனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சிவாங்கி தொடர்ந்து முன்னேறிக்கொண்டே வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட நம்ம சிவாங்கியா இது? பரதநாட்டியம் ஆடி ரசிகர்களை சொக்க வைத்த சின்னத்திரை ஹாசினி.! 1

விளம்பரம்

ஆனால் சிவாங்கியால் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்ல முடியவில்லை. அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இருந்தபோதிலும் மனம் தளராத சிவாங்கி அடுத்ததாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சிவாங்கிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் சிவாங்கி, தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பல படங்களில் பின்னணி பாடியும் வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும், வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியும் இருக்கிறார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றுள்ள சிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  விக்ரமனுக்கு ஆதரவளித்த அசீமின் சொந்த தாய் மாமாவும், MLAவுமான ஆளூர் ஷாநவாஸ்.! அதிர்ச்சியில் அசீம் ரசிகர்கள்.!

அட நம்ம சிவாங்கியா இது? பரதநாட்டியம் ஆடி ரசிகர்களை சொக்க வைத்த சின்னத்திரை ஹாசினி.! 3

விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது பாட்டு பாடி ஆல்பமாக வெளியிடுவது, வீடியோக்களை வெளியிடுவது என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் பரதநாட்டியம் ஆடி அந்த வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பின்பு ரசிகர்கள் சிவாங்கியை வாழ்த்தி வருகின்றனர். பாட்டு, நடனம், காமெடி, நடிப்பு என்று பன்முக திறமையாளராக வலம் வருவதாகவும் சிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் சிவாங்கியின் நடனத்தை பார்க்க..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment