இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் அயோத்தி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக மாறினார் சசிகுமார். இவர் 1999 ஆம் ஆண்டு சேது படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராக மாறினார். 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் என்கிற படத்தில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்திருந்தார் சசிகுமார். அதன் பின்னர் இவர் நாடோடிகள், சம்போ சிவ சம்போ, ஈசன் போன்ற பல படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு குட்டிப்புலி, கிடாரி, கொடி வீரன் போன்ற படங்கள் திருப்புமுனையாக அமைந்த படங்களாகும். கடைசியாக நாடோடிகள் 2, உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், காரி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் பகைவனுக்கு அருள்வாய், நா நா,நந்தன், அயோத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அயோத்தி படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் மந்திரமூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு மதப் பிரச்சினைகளை பேசும் திரைப்படமாக இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், போஸ், வெங்கட் யஸ்பால் சர்மா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றார்கள்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil