ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 168 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார்.

திரை உலகை 50 ஆண்டுகளாக கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் நேற்று பொங்கல் கொண்டாடி இருக்கும் நிலையில் அவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் மகன்களான லிங்கா மட்டும் யாத்ராவுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். அவர்களுக்கு சமாதானம் பேசியதும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. விரைவில் இருவரும் இணைவார்கள் என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அதற்கான எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஐஸ்வர்யாவும் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். ஐஸ்வர்யா தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் அவ்வப்போது சென்று தனது தந்தை தனுசை பார்த்துவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்று ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அவரது தாய் லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு பொங்கல் ஊட்டுவதையும், மாடுகளுக்கு பொங்கல் படைத்தது, ரஜினி மற்றும் லதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.