அசீம் மகனை பிக்பாஸ் அழைத்து வர முடியாத உண்மையான காரணம் இதுதான்.! ஓப்பனாக பேசிய ஆதில்.!

பிக்பாஸில் கலந்து கொண்ட அசீமின் மகன் ரயான் ஏன் உள்ளே வரவில்லை? என்பதற்கு அவரது தம்பி ஆதில் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் தற்போது 102 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் அசீம். இவர் இந்த சீசன் ஆரம்பித்தது முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வருகிறார். பிக்பாஸ் ஆரம்பித்து ஏறத்தாழ அனைத்து வாரங்களிலும் நாமினேஷனில் வந்த போதிலும் மக்கள் இவரை அதிக வாக்குகள் அளித்தி காப்பாற்றிக் கொண்டே வந்தனர். இருந்த போதும் சக போட்டியாளர்களை அவமரியாதையாக பேசுவது, அவர்களை ஒருமையில் திட்டுவது என்று தொடர்ந்து சர்ச்சைக்குரிய போட்டியாளராகவே இருந்து வருகிறார் அசீம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சேனலின் டிஆர்பிக்காக அசீமை இவ்வாறு வெளியேற்றாமல் வைத்திருக்கிறார்கள் என்றும், அசீமிற்கு வெளியில் மிகப்பெரிய PR டீம் இருக்கிறது அதனால் தான் அவரை வெளியேற்ற முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

அசீம் மகனை பிக்பாஸ் அழைத்து வர முடியாத உண்மையான காரணம் இதுதான்.! ஓப்பனாக பேசிய ஆதில்.! 1
இருந்தபோதிலும் அசீமிடம் சில நல்ல குணங்கள் இருக்கவே செய்கிறது. அவர் தனது மகன் ரயானுக்காக அடிக்கடி ஏங்குவதும் உண்டு. கேமரா முன்பு சென்றும், கமலஹாசன் முன்பும் தான் தனது மகன் ரயானை மிகவும் விரும்புவதாக அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் பிரீஸ் டாஸ்க் எனப்படும் குடும்பத்தினர் வரும் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அசீமின் மகன் ரயான் வருவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது தம்பி ஆதிலும் நண்பர் சதாமும்தான் உள்ளே வந்தார்கள். இது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அசீமிற்கு திருமணமாகி விவாகரத்தான செய்தி நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். அசீம் மகன் ரயான் ஒன்றரை வயதாக இருக்கும் பொழுது இந்த பிரிவு ஏற்பட்டது. பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் தனது மகன் ரயானை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது மகன் ரயானை அழைத்து வர முடியாததற்கான உண்மையான காரணத்தை அசீமின் தம்பி ஆதில் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து செண்டை மேளம் வாசித்து ஆடிய கோபி..!

அசீம் மகனை பிக்பாஸ் அழைத்து வர முடியாத உண்மையான காரணம் இதுதான்.! ஓப்பனாக பேசிய ஆதில்.! 3
அதில் அவர் கூறியுள்ளதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மகனுக்காக ஷூட்டிங்கை கூட கேன்சல் செய்துவிட்டு வீட்டில் இருப்பார். தனது அண்ணன் ஊட்டி விட்டால் தான் ரயான் சாப்பிடவே செய்வார். அந்த அளவிற்கு தந்தை மீது மிகுந்த பாசம் உடையவராக இருக்கிறார் ரயான். ஆனால் அவரை பிக் பாஸிற்குள் அழைத்து வர முடியாத ஒரு நிலைமை இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ரயானை அசீமால் பார்க்க முடியும். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது புதனோ? வியாழக்கிழமையோ சென்றேன். எனவே ரயானை அழைத்து வர முடியவில்லை. மேலும் தான் ரயானின் தாயாரிடம் பேசியபோது அவருக்கு உடல்நிலை சரியில்லை, சளி பிடித்திருக்கிறது என்று கூறினார்கள். அதனால் நாங்களும் அவரை அழைத்து வராமல் விட்டு விட்டோம் என்று ஆதில் கூறியிருக்கிறார்.அவர் பேசிய அந்த வீடியோவை காண கீழே உள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment