பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட அசீம்.!

பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது தனது முதல் வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் அசீம். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியின் ஒரு முக்கிய போட்டியாளராக வலம் வந்தவர் நடிகர் அசீம். இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் இவருக்கு தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானார் அசீம். அதன் பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்கிற சீரியலில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து இவருக்கு பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இவருக்கு “பகல் நிலவு” தொடர் திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கும் ஷிவானி நாராயணனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மூலமாக இந்த தொடர் மிகப்பிரபலமானது. அசீமுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட அசீம்.! 1

விளம்பரம்

இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு பிரபலம் கிடைக்கவே அடுத்தடுத்த சீரியல் கமிட்டாக தொடங்கினார். பின்னர் அவர் கடைக்குட்டி சிங்கம் என்கிற நாடகத்தில் நடித்தார். மேலும் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார். அதன் பின்னர் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்ற அவர் “நிறம் மாறாத பூக்கள்” என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பூவே உனக்காக” என்கிற சீரியலிலும் நடித்து வந்தார். தற்போது இவருக்கு பிக் பாஸ் சீசன் சிக்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் நன்றாக விளையாடிய டைட்டிலையும் வென்றிருந்தார் அசீம். தற்போது வெளியே வந்த பின்னர் இரண்டு நாட்களாக எந்த பதிவையும் போடாமல் இருந்து வந்த அவர், முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடையவை  இது Unfair Eviction.! பிக்பாஸ் நியாமான ஷோவே கிடையாது.! பிக்பாஸை வெளுத்து வாங்கிய வனிதா.!

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட அசீம்.! 3
அதில் அவர் உலகெங்கிலும் வாழும் தனது தமிழ் சொந்தங்களுக்கு நன்றி, பல்வேறு தளங்களில் தனக்கு வரும் ஆதரவை கண்டு திகைத்து நிற்பதாகவும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி, என் தமிழ் மக்களை உயிர் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் என்றும் பேசி இருக்கிறார். மேலும் தான் ஜெயித்த 50 லட்சம் பணத்தில் 25 லட்சம் பணத்தை கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் படிப்பு செலவிற்காக செலவழிக்க உள்ளதாகவும் இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்றும், அதனால் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து இந்த பணத்தை அதில் செலுத்தி கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு அது வழங்கப்படும் என்றும் அசீம் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அசீமை கோவக்காரன் என்றும் மோசடிக்காரன் என்றும் கூறினீர்களே, பாருங்கள் இதுதான் அசீமின் உண்மையான உள்ளம் என்று அசீமின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment