இந்த பணம், காசு, மெடல் எல்லாம் தேவை இல்ல.! மக்கள் அன்பு கிடைச்சு இருக்கு.! செம்ம கெத்தாக பேசிய விக்ரமன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் விக்ரமன் தற்போது விஜய் தொலைக்காட்சிக்கு முதல் முறையாக லைவ் வீடியோவில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் .அதில் பிக்பாஸ் குறித்தும், பிக்பாஸ் வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸை நான் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை, அந்த நிகழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது, எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி தான் என்று பேச தொடங்கினார் . பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் எபிசோடுகளை பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு தான் இந்த நண்பர்கள் அனைவரையும் என் வாழ்க்கை பயணத்தில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். எனவே ஒரு எபிசோடு கூட பார்க்கவில்லை என்று கூறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனக்கு பிடித்தவர்கள் என்று அமுதவாணன், ஏடிகே, ஷிவின் மற்றும் மகேஸ்வரி என்றும், அதில் என்னுடைய ஃபேவரைட் ஷிவின் என்றும் பேசினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணம், காசு, மெடல் எல்லாம் தேவை இல்ல.! மக்கள் அன்பு கிடைச்சு இருக்கு.! செம்ம கெத்தாக பேசிய விக்ரமன்.! 1
பின்னர் பிக்பாஸ்க்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு ,பொங்கல் அன்று தாய்மார்கள் கோலத்தில் “அறம் வெல்லும்” என்று எனது முகத்துடன் வரைந்திருந்தது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலும் இது போன்று தாய்மார்கள் அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளையாகவும் சகோதரனாகவும் ஏற்றுக் கொண்டால்தான் இப்படி செய்வார்கள். மேலும் எனக்கு தாய்மார்களிடம் இருந்து இவ்வாறு அழைப்புகள் வருவது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 2020 ஆம் ஆண்டு நான் பத்திரிக்கையாளராக இருந்தபோது கொரோனா தொற்று சமயத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு அழைக்கச் சொல்லி என்னுடைய தொலைபேசி எண்ணை இணையத்தில் பகிர்ந்திருந்தேன். அந்த எண் தற்போது வைரலாகி பல தாய்மார்கள் எனக்கு வீடியோ கால் செய்து பேசுகிறார்கள். சிலர் தங்கம் என்று என்னை அழைக்கிறார்கள். சிலர் முடிவுகளைப் பார்த்த பின்பு இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். ஒருவருக்கு நான் ஜெயிக்கவில்லை என்றதும் அதிர்ச்சியில் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் போன் செய்து பேசினேன்.

விளம்பரம்
தொடர்புடையவை  KARMA-ன்னு ஒன்னு இருக்கு..! உன்னையும் போட்டு மிதிப்பாங்க..! Priyanka-ஐ தாக்கி பேசிய Anitha Sambath..!

இந்த பணம், காசு, மெடல் எல்லாம் தேவை இல்ல.! மக்கள் அன்பு கிடைச்சு இருக்கு.! செம்ம கெத்தாக பேசிய விக்ரமன்.! 3
இவ்வாறு மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. இந்த அன்பு ஒன்றே போதும் பிக்பாஸில் கொடுத்த அந்த பணமும் மெடலும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் நாம் தான் ஜெயித்தோம். அறம் தான் ஜெயித்தது என்று பேசினார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் கூறும்பொழுது ஷிவின் தனக்கு தோழி, என்றும் அவருக்கு தோள் கொடுப்பேன் என்றும், ஏடிகே இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் என்றும் கூறினார். மேலும் மகேஸ்வரி பற்றி கூறும்பொழுது வெளியே வந்த பிறகும் ஒரு நட்பு தொடர வேண்டும் என்று நான் நினைப்பது மகேஸ்வரி இடம்தான். மைனா எனக்கு ஒரு தங்கை போன்றவர், துருவ் வீட்டிற்கு உள்ளே வந்த பொழுது என்னை விக்கு மாமா என்று அழைத்தார், எனவே மைனாவை நான் தங்கையாக பார்க்கிறேன் என்று பேசினார்.மேலும் அமுதவாணன் மிகப்பெரிய கலைஞன், என்னுடைய சகோதரன் என்றும் பேசினார். அசீம் பற்றி பேசும்பொழுது அவர் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு படிப்பு செலவிற்கு பணம் கொடுப்பேன் என்று சொன்னது பாராட்டுக்குரியது என்று கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  டிசைன் செய்து கொடுத்தது மஹா தான் என்கிற உண்மையை அறிந்து கொண்ட சூர்யா.! 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment