டிசைன் செய்து கொடுத்தது மஹா தான் என்கிற உண்மையை அறிந்து கொண்ட சூர்யா.! ‘ஆஹா கல்யாணம்’ ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சூர்யாவின் வூலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு மஹா செய்து கொடுத்த டிசைன் மிகவும் பிடித்துப் போகிறது. இதனால் சூர்யாவுடனான ப்ராஜக்ட்டை ஒப்பந்ததாரர்கள் சூர்யாவுக்கு வழங்கிவிட்டு செல்கின்றனர். அந்த மகிழ்ச்சியில் சூர்யா மஹாவிற்கு சம்பளம் வழங்குகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் ஏழைப் பெண்ணாக இருக்கும் மஹாவை பணக்காரராக இருக்கும் சூர்யா திருமணம் செய்து கொள்கிறார். சூர்யாவிற்கு மஹாவின் அக்காவை தான் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பார்கள். ஆனால் சூர்யாவின் தம்பி கௌதம் செய்த சூழ்ச்சியால் அவர் மஹாவை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைன் செய்து கொடுத்தது மஹா தான் என்கிற உண்மையை அறிந்து கொண்ட சூர்யா.! 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ 1

விளம்பரம்

ஐஸ்வர்யாவை கடத்திச் சென்று சூர்யாவை அவமானப்படுத்த நினைக்கிறார் கௌதம் அதேபோல திருமணத்தன்று ஐஸ்வர்யாவை கடத்தி விடுகிறார். இந்த உண்மை சமீபத்தில் சூர்யாவிற்கு தெரிய வந்து கௌதமுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் சூர்யாவும் மஹாவும் தற்போது நெருங்கி பழக ஆரம்பித்திருக்கின்றனர். சூர்யாவிற்கு மஹாவை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்திருக்கிறது. இதற்கிடையில் சூர்யாவின் கம்பெனியில் டிசைன் செய்து கொடுக்கிறார் மஹா. ஆனால் மஹா தான் இதை செய்தார் என்ற உண்மை சூர்யாவிற்கு இத்தனை நாட்களாக தெரியாது.

தொடர்புடையவை  மனோஜை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாமல் பணத்தை திருப்பி கொடுத்த ரோகினி..! அதிர்ச்சியாகிய விஜயா மற்றும் மனோஜ்..!

டிசைன் செய்து கொடுத்தது மஹா தான் என்கிற உண்மையை அறிந்து கொண்ட சூர்யா.! 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ 3

விளம்பரம்

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சூர்யாவின் அலுவலகத்திற்கு மஹா வருகிறார். அங்கு கிளைண்ட் இருக்கும் அறைக்குச் செல்லும் மஹா, தானே இந்த டிசைன்களை வரைந்ததாக கூறுகிறார். மேலும் அது மிகவும் பிடித்துப் போனதால் அனைவரும் சூர்யாவிற்கு தங்களது ஒப்பந்தங்களை வழங்கிவிட்டு செல்கின்றனர். இதனால் மகிழ்ச்சியான சூர்யா மஹாவிற்கு சம்பளத்தை வழங்குகிறார். உன் உழைப்பிற்கு இது கூலி என்று சொல்லி மஹா கைகளில் பணத்தைக் கொடுக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹா கண்ணீர் விட்டு அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment