ஐஸ்வர்யா – ஷங்கர் பற்றிய உண்மைகளை கண்டுபிடித்த ஜீவா மற்றும் பிரியா .! Worth-uh ப்ரோமோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் அனைத்தையும் ஜீவா மற்றும் பிரியா ஜோடிகள் இணைந்து கண்டுபிடித்துவிடுகின்றனர். ஜீவாவின் கடைசி தம்பியான அர்ஜுனுக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர் .ஆனால் ஐஸ்வர்யாவை தொடர்ந்து ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறான். இதை ஒரு முறை பிரியா பார்த்துவிடுகிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு அர்ஜுன் அதிர்ச்சியில் உறைகிறார். ஐஸ்வர்யாவை பின் தொடரும் நபர் யார் என ஜீவாவும், பிரியாவும் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா - ஷங்கர் பற்றிய உண்மைகளை கண்டுபிடித்த ஜீவா மற்றும் பிரியா .! Worth-uh ப்ரோமோ.! 1
இதற்காக இருவரும் ஐஸ்வர்யா தங்கியிருந்த ஹோட்டலிலேயே ரூம் எடுத்து தங்குகின்றனர். தொடர்ந்து ஜீவா அங்கிருக்கும் அனைவரிடமும் விசாரிக்கிறார். ஆனால் அவருக்கு எந்த க்ளுவும் கிடைக்காததால் ஹோட்டலின் செக்யூரிட்டிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அதன் சிசிடிவியை காட்டுமாறு கேட்கிறார். மேலும் ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து வந்த நபரை புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பின்னர் வீட்டிற்கு வரும் ஜீவா. பிரியாவிடம் தான் ஐஸ்வர்யாவின் போனை திருடி சென்று விட்டதாகவும், ஐஸ்வர்யாவை பின் தொடரும் நபர் யார் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த நபர் சங்கர் எனவும், ஐஸ்வர்யா போல அவருக்கு மெசேஜ் அனுப்பி ஒரு இடத்திற்கு வர வழைக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உங்கள காயப்படுத்தி இருந்தா Sorry..! DJ பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மன்னிப்பு கேட்ட பூஜா..!

ஐஸ்வர்யா - ஷங்கர் பற்றிய உண்மைகளை கண்டுபிடித்த ஜீவா மற்றும் பிரியா .! Worth-uh ப்ரோமோ.! 3

ஐஸ்வர்யாவின் மெசேஜை உண்மை என நம்பும் சங்கர், அந்த இடத்திற்கு வருகிறார். அவரை பிரியாவும், ஜீவாவும் இணைந்து அடித்து துவைக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment