சின்னத்திரையில் புகழ்பெற்று விளங்கி வரும் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி, தற்போது தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒரு எளிய இல்லத்தரசியின் கதாபாத்திரத்தை அழகாக எடுத்து விளக்கும் விதமாக அமைந்த ஒரு தொடர் ஆகும். இந்தத் தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்ட பாக்கியலட்சுமி தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கேட்டரிங் சர்வீஸ், சமையல், மசாலா பொருட்கள் செய்து கொடுப்பது என்று பல வேலைகளை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரது கணவர் கோபி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கோபி சிறுக சிறுக காசு சேர்த்து கட்டிய வீட்டில்தான் தற்போது பாக்கியலட்சுமி மற்றும் கோபியின் பெற்றோர்கள் என அனைவரும் வசித்து வருகின்றனர். தற்போது அந்த வீட்டை விற்கப் போவதாக கோபி எடுத்திருக்கும் அதிரடி முடிவால் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபி தற்போதைய மார்க்கெட் விலைப்படி 70 லட்சத்திற்கு அந்த வீட்டை விற்கப் போவதாகவும், வீட்டில் குடியிருக்கும் பாக்யா மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைவரும் காலி செய்து விடுமாறும் மிரட்டுகிறார். இதனால் கடுப்பான பாக்கியலட்சுமியின் கடைசி மகன் எழில் இந்த வீட்டை எவ்வளவு விலை கொடுத்தாவது நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சவால் விடுகிறார். ஆனால் 70 லட்சத்திற்கு எங்க போவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் எழில். இந்த நிலையில் எழிலுடன் வேலை பார்த்து வரும் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலை திருமணம் செய்து கொண்டால் 70 லட்சத்தை தருவதாக கூறி எழிலின் பாட்டி ஈஸ்வரியை பிரைன்வாஷ் செய்கிறார். ஈஸ்வரி பாட்டியும் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் 70 லட்சம் கிடைக்கும் என்று எழிலையும் வர்ஷினிக்கும் கட்டாய திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் எழில் ஏற்கனவே விதவை பெண்ணாக இருக்கும் அமிர்தாவை காதலித்து வருகிறார். பணத்திற்காக தான் வர்ஷினியை திருமணம் செய்து கொள்வதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் அமிர்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் எழில்.

இந்த காட்சியை பார்த்த பாக்கியா பணத்திற்காக எழிலுக்கும் வர்ஷினிக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதை அறிந்து கொள்கிறார். மேலும் அமிர்தாவை இத்தனை நாள் காதலித்து அவரை கைவிடுவதும் சரியில்லை என்பதையும் உணர்கிறார். மேலும் விருப்பமில்லாமல் தனக்கும் கோபிக்கும் நடந்த திருமணம் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். தன் மகனுக்கும் அது போல் நடக்கக்கூடாது என்று பாக்யா எண்ணுகிறார். அதனால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்யா திருமணம் புடிக்கவில்லை என்றால் தைரியமாக நோ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் என்று வீர வசனங்கள் பேசும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இதனால் வரும் வாரங்களில் பாக்யா எழிலுக்கு நடக்க இருக்கும் கட்டாயத் திருமணத்தை நிறுத்தி அமிர்தாவுடன் அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television