தன் மகள்கள் குறித்து அசிங்கமாக வந்த கமெண்டிற்கு தற்போது நடிகை குஷ்பூ காட்டமாக விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே பலமுறை உருவக் கேலிகலகு உள்ளாகி இருக்கிறார்கள் குஷ்புவின் மகள்கள். அந்த வரிசையில் தற்போது மீண்டும் மீண்டும் அவர்கள் உருவக் கேலிக்கு ஆளாகி இருக்கிறார்கள். 90களில் நடிகை குஷ்பூ முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்காக திருச்சியில் கோவில் கூட உருவாக்கினார்கள். அந்த அளவிற்கு குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயேமுன்னணி நடிகர்களாக இருந்த அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பூ. மும்பையைச் சேர்ந்த இவர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட பின்னர் தமிழ்நாட்டிலேயே முழு நேரமாக செட்டில் ஆகிவிட்டார். தற்போது சினிமா சின்னத்திரை, அரசியல், தயாரிப்பு என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் தனது கணவருடன் இணைந்து அவ னி சினி மேக்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம் மலையாளம், தெலுங்கு,போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2000 ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபல இயக்குனராக இருந்த சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த இரண்டு பேருமே குஷ்புவை போல மிகவும் குண்டான உருவத்தில் இருந்ததால் மிகுந்த கேள்விக்கு உள்ளானார்கள். அவர்களை கிண்டல் செய்யும் போதெல்லாம் ஒரு தாயாக துடித்து போன குஷ்பூ பலமுறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இருப்பினும் விமர்சனங்கள் குறையாமல் இருந்ததால் குஷ்பூவின் மகள்கள் இருவரும் மிகவும் முயற்சி செய்து உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக குஷ்பூவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து இருந்தார்.

இந்த சர்ச்சைகள் ஓரளவுக்கு ஓய்ந்த பின்னர் தற்போது குஷ்புவின் மகள்கள் குறித்து ஒரு மோசமான கமெண்ட் ஒன்று வந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ தனது மகள்களுடன் தனது குடும்பத்தினரிடம் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது கூட அவர் துபாயிலிருந்து அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நேற்று தனது இரு மகள்களும் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொபைல் பிக்சராக மாற்றி இருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஒருவர், “இருவரும் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதை பார்த்து கடுப்பான குஷ்பூ தற்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டு இருக்கிறார். அதில் 20 வயது மற்றும் 22 வயதுடைய பெண்கள் எதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்? குழந்தைகள் கேலிக்கு உள்ளாவது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. இந்த குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.