கருத்து சொல்லணும்னா வாட்சப்ல சொல்லுங்கடா.! அதுக்கு ஏன் படம் எடுக்குறீங்க? வச்சி செய்த ப்ளூ சட்டை

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் வாத்தி. இந்த படத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் கதை குறித்து பார்த்தோம் என்றால், கல்வியை வியாபாரமாக பார்க்கும் பண முதலாளியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர் ஒரு தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசாங்கம், அரசு பள்ளிகளை முன்னேற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறது. இதனால் தனியார் பள்ளிகளின் செல்வாக்கு குறைந்து விடும் என்று எண்ணும் சமுத்திரகனி, தன்னுடைய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு அனுப்பி வைத்து அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தப் போவதாக பொய்யான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்து சொல்லணும்னா வாட்சப்ல சொல்லுங்கடா.! அதுக்கு ஏன் படம் எடுக்குறீங்க? வச்சி செய்த ப்ளூ சட்டை 1
இதன் படி சமுத்திரகனியின் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார் தனுஷ். அங்கு அரசு பள்ளி மாணவர்களை அவர் எப்படி தரம் உயர்த்துகிறார் என்பது குறித்த கதை தான் வாத்தி. இந்த கதை ஏற்கனவே ராட்சசி, சாட்டை போன்ற பல படங்களில் வந்த கதை தான். இருந்த போதும் இதில் என்ன வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் தற்போது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, முதலில் தமிழ்நாட்டை காட்டுகிறார்கள், ஆனால் கொஞ்சம் நேரம் செல்ல செல்ல படம் முழு ஆந்திரா மசாலா போல ஆகிவிட்டது. எப்படி பிரின்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் ரெண்டும் கெட்டானாக எடுக்கப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டதோ, அதுபோல இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். வாரிசு அதையும் தாண்டி முழு ஹிந்தி சீரியல் போல் எடுத்து இருந்தார்கள் அது போல் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றோம். ஆனால் முதல் பாதி மிகவும் நன்றாக இருந்தது. இரண்டாவது பாதையில் சாராய வியாபாரிகளுக்கு இடையில் நடக்கும் சண்டை போல எடுத்து வைத்திருக்கிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்" இறந்த மகள் பற்றி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி

கருத்து சொல்லணும்னா வாட்சப்ல சொல்லுங்கடா.! அதுக்கு ஏன் படம் எடுக்குறீங்க? வச்சி செய்த ப்ளூ சட்டை 3
இரண்டு பேரும் மூளையை வைத்து சண்டை போடுவார்கள் என்று பார்த்தால் சாராவி வியாபாரி போல் அடியாட்களை ஏவி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தமிழ்நாட்டுக்கு பொருந்தாத கதை. பழைய கதை. ராட்சசி, சாட்டை போன்ற படங்கள் ஏற்கனவே இந்த கதையை எடுத்து விட்டன. படம் நன்றாக இருக்கிறது நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று பலர் கூறுகின்றார்கள், உங்கள் கருத்து யாருக்கு வேண்டும்? நல்ல கருத்தை வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஆக அனுப்புங்கள் நாங்கள் படித்துக் கொள்கிறோம். இல்லையென்றால் மேடை போட்டு பேசுங்கள். படத்திற்கு தேவையானதை படத்தில் வையுங்கள். அதை விட்டுவிட்டு கருத்து சொல்கிறேன் என்று இறங்காதீர்கள். ஹீரோ என்ட்ரி ஹீரோயின் என்ட்ரியில் பாட்டு போடாமல் மிகவும் நன்றாக எடுத்து இருந்தார்கள். மைண்ட் கேமை வைத்து விளையாடி இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். ஆனால் வழக்கம் போல எத்தனை அடியாட்கள் வந்தாலும் ஹீரோவை ஜெயிக்க முடியாதது போல காட்சிகள் வைத்து படத்தை கெடுத்து விட்டார்கள் என்று விமர்சனங்களை கூறினார். அவரின் விமர்சனங்களை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  அரசே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது, லீவ் வேண்டும்..! விக்ரமை செல்லமாக கலாய்த்த கார்த்தி.!

YouTube Video Embed Code Credits: Tamil Talkies.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment