வருணு என்ன பண்ண போற? வைட்டிங்லேயே வெறி ஏறுதே.! தரமான சம்பவம் செய்ய போகும் வருண்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு தொடர்களுக்கும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் இருக்கிறது. அதுபோல மௌன ராகம் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கதாநாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவி மல்லிகா, அவருடைய மகள் சக்தி. இரண்டாவது மனைவி காதம்பரி, அவருடைய மகள் ஸ்ருதி் இதில் சக்தி வருண் என்பவரை திருமணம் செய்து கொள்ள, அவரது தம்பி தருணை ஸ்ருதி திருமணம் செய்து கொள்கிறார். இங்கிருந்து மௌன ராகம் சீசன் 2 வின் கதை ஆரம்பமானது. ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரிக்கு மூத்த மனைவி மல்லிகா மற்றும் அவரது மகள் சக்தியை சுத்தமாக பிடிக்காது. அவர்களை எப்படியாவது பழி வாங்க வேண்டும், அவர்களை கார்த்தி இடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று தீய எண்ணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கதைப்படி ஸ்ருதி, சக்தியை எப்படியாவது அவரது மாமியாரிடம் கெட்ட பெயர் வாங்க வைத்து விட வேண்டுமென்று பல வகைகளில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணு என்ன பண்ண போற? வைட்டிங்லேயே வெறி ஏறுதே.! தரமான சம்பவம் செய்ய போகும் வருண்.! 1
அதற்காக தற்போது குலதெய்வத்திற்காக பூஜை செய்து அணிவிக்கப்பட இருந்த நகையை திருடி வைத்திருக்கிறார் ஸ்ருதி. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஊர்காரர்கள் அனைவரும் வந்து பரம்பரை பரம்பரையாக குலதெய்வத்திற்காக பாதுகாக்கப்பட்ட நகைகளை இப்படி காணாமல் போகச் செய்து விட்டீர்களே என்று வருண் குடும்பத்தினரை கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர். இதனால் வருணின் அம்மா மிகுந்த சோகத்தில் இருக்கிறார். நகைகளை தொலைத்த சக்தியும் மிகுந்த சோகத்தில் இருக்கிறார். ஆனால் வருண் நகைகளை எப்படியாவது திருப்பி கண்டுபிடித்து விடுவேன் என்று குடும்பத்தினரிடம் சபதம் எடுத்திருக்கிறார். அதன்படி அவர் நேற்று கோவிலுக்கு சென்ற போது காரில் இருந்த நகை எப்படி காணாமல் போனது என்பதை மறுபடியும் காட்சிகளாக நினைவுபடுத்தி பார்க்குறார். அப்போது கார் சாவியின் அருகே ஸ்ருதி நின்று கொண்டிருந்தது அவருக்கு நினைவுக்கு வருகிறது. இதனால் ஸ்ருதான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என்று எண்ணி அவர் ஸ்ருதி செல்லும் இடங்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ருதி தான் கார் ஓட்டுனரிடம் காரை திறக்கச் செய்து அதிலிருந்து நகைகளை திருடச் செய்து இருக்கிறார் என்ற உண்மையை கண்டுபிடித்து விடுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திருமணமாகி 100வது நாள்.! ரொம்ப சந்தோசமா இருக்கேன் அம்மு.! ரவீந்தர் வெளியிட்ட அழகிய பதிவு.!

வருணு என்ன பண்ண போற? வைட்டிங்லேயே வெறி ஏறுதே.! தரமான சம்பவம் செய்ய போகும் வருண்.! 3
மேலும் வருண் கூறியது போலவே சரியான சமயத்தில் நகைகளை கொண்டு வந்து சேர்த்து விட்டார். வீட்டிற்கு வந்த அனைவரும் எப்படி நகைகளை கண்டுபிடித்தாய் என்று வருணிடம் கேள்வி எழுப்பினர். மேலும் யார் நகைகளை திருடியது என்றும் கேள்வி எழுப்பினர். ஸ்ருதிதான் நகைகளை திருடி இருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் முன்னிலையிலும் போட்டு உடைத்து விடுகிறார் வருண். இதனால் கோபமான தருண் ஸ்ருதியைப் பார்த்து இனி நீ ஒரு நிமிடம் கூட இந்ம வீட்டில் இருக்கக் கூடாது இப்பொழுதே வீட்டை விட்டு வெளியே போ என்று கோபத்துடன் கூறுகிறார். இதனால் கதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. இனி ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியே செல்வாரா? அடுத்து என்ன செய்ய இருக்கிறார் என்பதெல்லாம் விரைவில் தெரியவரும். நீங்களும் அந்த ப்ரோமாவை காண கீழே உள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment