சின்னத்திரை நடிகை ரவீந்தருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் ஆகி 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி ரவீந்தர் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது மனைவியை கொஞ்சி ஒரு போஸ்ட்டை பதிவிட்டு இருக்கிறார். லிப்ரா ப்ரோடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் நடிகர் ரவீந்தர். இவர் உடல் பருமன் அதிகமாக இருப்பதால் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமியும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதால் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமியும் ரவீந்தரும் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகி 100 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்காக மகாலட்சுமியை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ரவீந்தர் இருவரும் டின்னர் சாப்பிட்ட புகைப்படங்களை பகிர்ந்த ரவீந்தர், 100 நாட்கள் நிறைவடைந்து விட்டது, இந்த 100 நாள் நிறைவுக்காக ஒரு போஸ்ட் போடுவதற்காக நான் சிறந்த கேப்ஷனை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னால் பொய்யாக எழுத முடியாது, நான் என்ன நினைக்கிறேனோ அதை எழுதுகிறேன். 37 வருடங்களுக்குப் பிறகு நான் 100 நாட்கள் ஒவ்வொரு நொடியும் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறேன்.

இதே போல் அன்பும் காதலும் என் மீது அக்கறையும் மகிழ்ச்சியும் சண்டைகளும் இருக்கட்டும். உன்னால் நான் சந்தோஷமாக வாழ்கிறேன் அம்மு என்று பதிவிட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்துள்ள மகாலட்சுமி சந்தோஷமாக வாழ்வோம் அம்மு, லவ் யூ புருஷா என்று பதில் அளித்து இருக்கிறார். இவர்களின் ரசிகர்கள் இந்த ஜோடி இதே போல் அன்புடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.