ட்விட்டரில் Fake Id பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து? மகன் கொடுத்த விளக்கம்.!

ட்விட்டரில் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண்ணுக்கு மொபைல் நம்பர் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தற்போது மாரிமுத்துவின் மகன் விளக்கம் அளித்திருக்கிறார். சின்னத்திரையில் தற்போது புகழ்பெற்ற தமிழ் நடிகர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் மாரிமுத்து. இவர் நடிகர் மட்டுமல்லாமல் அடிப்படையில் இயக்குனராகவும் இருக்கிறார். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற பல படங்களை இயக்கியும் இருக்கிறார் மாரிமுத்து. இயக்குனர்கள் வசந்த், எஸ் ஜே சூர்யா, மணிரத்தினம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவமும் பெற்றவர். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலங்களில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அஜித் குறித்து பேசும் பொழுது வாலி படத்திற்காக மீசை எடுக்குமாறு எஸ் ஜே சூர்யா கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் பல படங்களில் நடிக்க இருப்பதால் அதை செய்ய முடியாது என்று அஜித் மறுத்ததாகவும் கூறி ரசிகர்களுக்கு ஆச்சரியமான பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

தொடர்புடையவை  மகள் அனோஷ்காவின் பள்ளியில் Sports Day-வில் சைக்கிள் டயர் ஓட்டிய அஜித்.! வைரல் வீடியோ.!

ட்விட்டரில் Fake Id பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து? மகன் கொடுத்த விளக்கம்.! 1

விளம்பரம்

இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இளைஞர்கள், இளைஞிகள், இல்லத்தரசிகள், குடும்பத் தலைவர்கள் என அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நாடகமாக இருக்கும் எதிர்நீச்சல் கதையில் ஆதி குணசேகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சமீப காலமாக மாரிமுத்துவின் ட்வீட் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் இருந்து வருகிறது. அதில் பெண் ஒருவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் உங்களுக்கு கால் செய்யட்டுமா? என்ற கேள்வியுடன் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு கீழே மாரிமுத்துவின் ட்விட்டர் கணக்கில் இருந்து சரி என்று சொல்லி மொபைல் நம்பரையும் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த ரிப்ளை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ட்விட்டரில் Fake Id பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து? மகன் கொடுத்த விளக்கம்.! 3
எதிரநீச்சல் நாடகத்தில் பெண்களின் ஒழுக்கம் குறித்து பக்கம் பக்கமாக பாடம் எடுத்துவிட்டு நீங்களே இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா என்கிற கேள்வியை மாரிமுத்துவிடம் பலரும் எழுப்பி வந்தனர். ஆனால் இது மாரிமுத்து உடைய ஒரிஜினல் ஐடியா? ஃபேக் ஐடியா என்பதை கூட ஆராயாமல் பலரும் மாரிமுத்துவை திட்டி தீர்த்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் மாரிமுத்து பெயரில் இருந்த ட்விட்டர் பக்கமும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாரிமுத்துவின் மகன் தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அது மாரிமுத்துவின் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை, மாரிமுத்துவின் மொபைல் நம்பர் பலருக்கும் தெரியும் என்பதால் யாரோ அந்த எண்ணை தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர் என்று விளக்கம் அளித்து இருக்கிறார். அவரின் விளக்கத்துக்கு பின்னர் அந்த ஃபேக் ஐடியும் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாரிமுத்துவின் ட்விட்டர் பதிவு சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment