தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத பெயர் அஜித், இவரும் ஷாலினியும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் அதிகம் கொண்டாடப்படும் தம்பதிகளாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அன்று தொடங்கி இன்று வரை இவர்கள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அன்று தொடங்கி இன்று வரை காதல் ஜோடிகளாக வலம் வரும் இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். மூத்த மகள் பெயர் அனோஷ்கா. இரண்டாவது மகன் பெயர் ஆத்விக். திருமணத்திற்கு பிறகு படங்களின் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திய ஷாலினி, தனது குடும்பத்துடன் தனது பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவ்வபோது திரைப்படங்கள் பார்க்க வருவது, படங்களில் ப்ரோமோஷன்களுக்கு வருவது என்று மட்டுமே ஷாலினியை வெளியில் பார்க்க முடிகிறது. மற்ற நேரங்களில் அவர் பெரிதாக வெளியில் வருவதில்லை. அஜித்தும் சரி, ஷாலினியும் சரி இது நாள் வரையிலும் எந்த விதமான சமூக வலைத்தளங்களிலும் தங்களுக்கு என கணக்கு வைத்தது இல்லை. இந்த நிலையில் ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறார். அங்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி. துணிவு படம் நெருங்கும் வேளையில் அவர் இதுபோல் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கியிருப்பது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி அடிக்கடி குடும்ப புகைப்படங்களையும், அஜீத்தின் புகைப்படங்களையும் பார்க்க முடியும் என்று அவர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அஜித் ஷாலினி மற்றும் பிள்ளைகள் அனைவருடனும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஜித் மகள் அனோஷ்காவுக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் அஜித்தின் ரசிகர்கள் அனோஷ்காவுக்காக பள்ளிக்கு சென்று டயர் ஒட்டி விளையாடி இருக்கும் வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O