பாரதிகண்ணம்மா சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது தாமரை ஒரு அழகிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாரதி கண்ணம்மா நாடகத்தின் ஷூட்டிங் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை முழு வீடியோவாக அவர் பதிவிட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட “கருத்தமுத்து_ என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டு பாரதி கண்ணம்மா என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அருண் பிரசாத் பாரதியாகவும், நடிகை வினுஷா தேவி கண்ணமாகவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக நடித்து வந்தார். பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தின் கதை குறித்து பார்த்தோமானால், கண்ணம்மாவும் அஞ்சலியும் இருவரும் வேறு வேறு தாய்க்கு பிறந்த சகோதரிகள். கண்ணம்மா பாரதியை திருமணம் செய்து கொள்வார். பாரதி மீது ஆசைப்படும் அஞ்சலி பாரதியின் தம்பி அகிலனை திருமணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் கண்ணாமவை கொடுமைப்படுத்துகிறார். கண்ணம்மா கருப்பாக இருப்பதால் மாமியார் சௌந்தர்யாவிற்கும் கண்ணம்மாவை பிடிக்கவில்லை. எனவே அஞ்சலியும் சௌந்தர்யாவும் சேர்ந்து ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொடுமைப்படுத்துவதாக தான் நாடகம் ஆரம்பித்தது. பின்னர் அஞ்சலியும், சௌளந்தர்யா இருவரும் மனம் மாற பாரதியின் தோழி வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கண்ணம்மா மீது தேவையில்லாத பழிகளை சுமத்துகிறார். குறிப்பாக பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி வெண்பா ஏமாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக இந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்பி வந்தார். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு இந்த குழந்தைகள் தன்னுடையது தான் என்பது பாரதிக்கு தெரிய வருகிறது. ஆனால் கண்ணம்மாவோ இதை இவ்வளவு நாட்கள் நாங்கள் சொன்னபோது நீங்கள் மறுத்தீர்கள் இப்பொழுது உங்களுக்கு ஞானோதயம் வந்துவிட்டதா என்று சொல்லி பாரதியை விட்டு பிரிந்து ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். கண்ணம்மா மற்றும் குழந்தைகளை தேடி பாரதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு மனமாற்றம் நடக்கிறதா? அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்? என்பது குறித்து கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கிராமத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாக பிக்பாஸ் பிரபலம் தாமரைச்செல்வி, தாமரை என்கிற பெயரிலேயே நடித்து வருகிறார்.

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தாமரைச்செல்விக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முதல் நாடகமாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார். மேலும் அவர் லோட்டஸ் ஃபேமிலி என்கிற ஒரு youtube சேனலையும் தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது பாரதி கண்ணம்மா சூட்டிங் எவ்வாறு எடுக்கப்படுகிறது? என்பது குறித்த ஒரு விளாக் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Lotus Family