சிவகாமி கண் முன்னே ரவுடியை சுட்டுக் கொன்ற சந்தியா.! சிவகாமி எடுத்த அதிரடி முடிவு.!

சிவகாமி முன்பே ரவுடி ஒருவரை என்கவுன்டரில் சந்தியா சுட்டு கொன்றுள்ளார். இதை பார்த்த சிவகாமி அதிரடியாக முடிவு ஒன்றை எடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண், இனிப்புக் கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது மனைவி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசையை தெரிந்து கொள்கிறார். அதற்கு மாமியார் முட்டுக்கட்டையாக இருக்கிறார் இந்த தடைகள் அனைத்தையும் மீறி மனைவியை ஐபிஎஸ் ஆக்கினாரா? சந்தியா ஐபிஎஸ் ஆனாரா? அதற்கு அவரது மாமியார் ஒத்துக்கொண்டாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி. தற்போது பல தடைகளை மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் அனைத்தையும் முடித்து சந்தியா சொந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாமி கண் முன்னே ரவுடியை சுட்டுக் கொன்ற சந்தியா.! சிவகாமி எடுத்த அதிரடி முடிவு.! 1

விளம்பரம்

இந்த நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு விலகி இருந்தார். சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்திருந்தார் ரியா விஸ்வநாதன். இது குறித்து பேட்டி அளித்த ரியா விஸ்வநாதன் தனக்கு மிகவும் பிரஷர் கொடுக்கப்பட்டதாகவும், தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, இரவில் படுத்தால் தூக்கம் கூட வரவில்லை, அதனால் தான் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று அதிரடியாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். தனக்கும் சீரியல் குழுவிற்கும் கம்யூனிகேஷன் சரியில்லை. தனக்கு லீவே கிடைப்பதில்லை. மாதத்தில் முதல் 15 நாட்கள் லீவு என்றும் மீதமுள்ள 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்றும் ஆரம்பத்தில் கூறினர். ஆனால் ஆலியா விலகிய போது 30 நாளுமே நடிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுப்பார்கள். அதில் என் குடும்பத்தினர் கூட என்னால் நேரம் கூட செலவழிக்க முடியவில்லை என்று வேதனையுடன் பேசினார்.

தொடர்புடையவை  கதிர், வளவன், ஜனனி கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆன ஜீவானந்தம்.! அதிரடி ப்ரோமோ.!

சிவகாமி கண் முன்னே ரவுடியை சுட்டுக் கொன்ற சந்தியா.! சிவகாமி எடுத்த அதிரடி முடிவு.! 3

விளம்பரம்

தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா தற்போது சந்தியாவாக நடித்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மார்க்கெட்டில் வைத்து ரவுடி ஒருவரை சந்தியா சுட்டு கொலை செய்கிறார். இதை பார்த்த சிவகாமி சந்தியா மீது கோவம் கொள்கிறார். அருகில் இருந்தர்வர்கள் இந்த பாவம் எல்லாம் சந்தியா குடும்பத்தை தான் சேரும் என்று பேசிக்கொண்டிருக்க கோபத்தில் வீட்டிற்கு வரும் சிவகாமி அவர் உடுத்தியிருந்த சேலையை தீயில் போட்டு கொளுத்துகிறார். மேலும் ஒரு கொலையை செய்துவிட்டு வந்த சந்தியாவின் முகத்தில் தான் இனிமேல் முழிக்க போவதில்லை என்றும் அவர் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் .! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment