கடந்த சில வருடங்களாகவே சின்மயிக்கும் வைரமுத்துவிற்கும் சண்டை நீடித்துவரும் நிலையில் தற்போது மகளிர் தினத்திற்காக வைரமுத்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அவரை கிண்டல் செய்யும் விதமாக சின்மயி பதிலுக்கு மற்றொரு பதிவுகளை போட்டு இருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற திரைப்படத்தில் “ஒரு தெய்வம் தந்த பூவே” என்கிற பாடலை பாடியதன் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் பாடகி சின்மயி. அதனை தொடர்ந்து இவர் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்திருக்கிறார். தனது மெல்லிய குரலால் இவர் பாடிய மெலடி பாடல்கள் பலரின் இளைஞர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருந்தது. ஆனால் திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் Metoo என்கிற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இதுபோல் பாதிக்கப்பட்ட பெண்களை எல்லாம் ஒன்றாக ஒரே அணியில் திரட்டினார்., ஆனால் வைரமுத்துவின் மீது இவர் சொன்ன குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவுமே இல்லை. இதனால் வைரமுத்துவிற்கும் சின்மயிக்கும் இடையே பனிப்போர் நீண்டு கொண்டே இருந்தது.

தொடர்ந்து தன்னுடைய பதிவுகளிலும் வேறு ஏதேனும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு நடந்தாலும் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசி வருகிறார் சின்மயி. மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் குரல் கொடுத்து வருகிறார். பெண் அடிமைத்தனம், பெண் சுதந்திரம் போன்ற விஷயங்களுக்காகவும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கவிஞர் வைரமுத்து தனக்கே உரிய பாணியில் ஒரு கவிதை ஒன்று எழுதி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள், வீடு வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள், ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள், கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும், உலக மகளிர் திருநாள் வாழ்த்துக்கள் என்று வைரமுத்து கவிதையை பகிர்ந்து இருந்தார்.

அவர் எழுதிய கவிதை பாணியில் அவருக்கே சின்மயி பதில் ஒன்றை அளித்திருக்கிறார் ,வீட்டு வாசலை தாண்டும் பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள், பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். பெண் விடுதலை மற்றும் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவர் பேசுவதை என்னால் தாங்க முடியவில்லை என்று சின்மயி பதிவிட்டிருக்கிறார். இதில் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. https://t.co/E1671ftmn7
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2023