இனிமே அந்த சந்தியா மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்.! சந்தியா மீது செம்ம கடுப்பில் சிவகாமி..!

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனது சொந்த தேவைக்காக ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்கும் சந்தியாவிற்கு பர்மிஷன் கிடைக்கவில்லை. இதனால் சிவகாமி சந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இது ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவும், சந்தியாவாக நடிகை ஆஷா கௌடாவும் நடித்து வருகின்றனர். மனைவியின் கனவை நிறைவேற்ற போராடும் கணவனாக சித்து நடித்து வருகிறார். இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு நன்கு படித்த பெண்ணான சந்தியாவை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அவருக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ஐபிஎஸ் ஆகியிருக்கிறார் சந்தியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமே அந்த சந்தியா மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்.! சந்தியா மீது செம்ம கடுப்பில் சிவகாமி..! 1
தற்போது இந்த கதையிலிருந்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஆலியா மானசாதான் சந்தியாவாக நடித்து வந்தார். முதலில் அவர் இந்த நாடகத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அவரும் விலகி தற்போது கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா சந்தியாவாக நடித்து வருகிறார். பின்னர் இந்த கதையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா விலகினார். பின்னர் இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது கதைப்படி சந்தியா ஐபிஎஸ் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் கோவிலுக்கு முளைப்பாரி நேர்ந்து வைத்திருக்கின்றனர். முளைப்பாரிகளும் நன்றாக வளர்ந்து விட்டது. இதனால் இதை கோவிலில் செலுத்துவதற்காக கிளம்பி இருக்கின்றனர். அப்போது சந்தியா எம்எல்ஏவின் பந்தகோஸ்துக்காக ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். உடன் இருக்கும் போலீஸ் சிறிது நேரம் பர்மிஷன் கேளுங்கள் கிடைக்கும் என்று சந்தியாவிற்கு அறிவுரை கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  SPB மகளை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்த SPB மகள் பல்லவி.!

இனிமே அந்த சந்தியா மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்.! சந்தியா மீது செம்ம கடுப்பில் சிவகாமி..! 3
அதேபோல சந்தியாவும் பர்மிஷன் கேட்கிறார். ஆனால் உயர் அதிகாரியோ எம்எல்ஏ வந்துவிட்டு செல்லும் வரை நீங்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று கூறுகிறார். இன்னொரு புறம் கோவிலில் சந்தியாவிற்காக காத்துக் கொண்டிருக்கும் சிவகாமி கடுப்பாகிறார். இன்று மட்டும் சந்தியா வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று சரவணனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சந்தியா சொன்ன நேரத்திற்கு கோவிலுக்கு வருவாரா? என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment