தமிழும் சரஸ்வதியும் தொடரில் தற்போது கார்த்திகா? அர்ஜுனா யாரை சேர்மனாக கோதை அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் கதாநாயகனாக தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் தீபக்கும் கதாநாயகியாக சரஸ்வதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை நட்சத்திராவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த தொடர் படிக்காத சரஸ்வதியை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் இருப்பதாக நாடகத்தின் கதை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் திடீரென நாடகத்தில் ஒரு திருப்பமாக வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ட்ரி கொடுக்கிறார். அர்ஜூன் கதாநாயகனின் தங்கையான ராகினியை மயக்கி அவரை திருமணம் செய்து உள்ளே வருகிறார். உள்ளே வந்த பின்பு தான் அவருக்கும் தமிழின் குடும்பத்திற்கும் ஏற்கனவே இருக்கும் பழைய பகை தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழின் குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று அர்ஜூன் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முன் கதையாக அர்ஜுனனின் அப்பாவும் அக்காவும் இறந்ததற்கு தமிழின் அம்மா கோதை தான் காரணம் என்று அவர்கள் இந்த குடும்பத்தை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது கதைப்படி தமிழ் அவரது தம்பி கார்த்தி மற்றும் அவரது தங்கை கணவர் அர்ஜூன் ஆகிய மூன்று பேருக்கும் கோதை ஒரு டாஸ்க் ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் யார் தங்களுடைய திறமையால் இன்னொரு கம்பெனியை விலைக்கு வாங்குகிறார்களோ அவர்களுக்கு கோதை இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தின் சேர்மன் பதவியை தர இருப்பதாக போட்டி ஒன்றை வைத்து இருக்கிறார். இதற்காக மூன்று பேரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஒரு கட்டத்தில் அர்ஜூனும் தமிழும் தனியாக பேசிக் கொண்டிருக்கும்போது அர்ஜுன் ஆட்களை செட்டப் செய்து தன்னை குத்தி கத்தியால் குத்துமாறு செய்து விடுகிறார். ஆனால் வெளியில் வந்து தமிழ் தான் தன்னை கத்தியால் குத்தியது போல நாடகமாடுகிறார்.

இதை தெரிந்து கொள்ளும் கோதை என் மகளின் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாயா என்று சொல்லி தமிழை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். வெளியே வந்த பின்பும் அர்ஜுன் தொடர்ந்து தமிழுக்கு தொல்லைகளை கொடுத்து வருகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேர்மன் பதவியை அர்ஜுனுக்கு கொடுக்க சொல்லி கோதையின் கணவர் கோதையிடம் கூறிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் வசுவோ கம்பெனியில் வேலை செய்யும் தொழிலார்களிடம் பேசுவோம், யாருக்கு அதிக சப்போர்ட் இருக்கிறதோ அவர்களை சேர்மனாக நியமிக்கலாம் என ஐடியா கொடுக்கிறார். இதை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் ஆட்களை வைத்து பேசும் போது கை தட்ட சொல்கிறார். அதே போல அர்ஜுனுக்கு பலரும் கை தட்டுகின்றனர். இதனால் கோதை குழப்பத்தில் இருக்கிறார். அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகியுள்ளஅந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television