யாருமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டது ஏன்? உண்மைகளை உடைத்த ரோஜா சீரியல் நடிகை.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா சமீபத்தில் மலேசியாவில் உள்ள கோவிலில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அவரின் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்கு அவரது பெற்றோர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் என யாரும் இல்லாமல் அவர்கள் இருவர் மட்டுமே கோவிலில் வைத்து எளிமையான முறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டிருந்தனர். இது சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து பிரியங்கா நல்காரியே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தனது குடும்பத்தினர் பெற்றோர்கள் என யாருமே வராததற்கு என்ன காரணம் என்பதை அவர் விளக்கி பேசி இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக அது இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யாருமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டது ஏன்? உண்மைகளை உடைத்த ரோஜா சீரியல் நடிகை.! 1

விளம்பரம்

இந்தத் தொடரின் கதாநாயகனாக சிபு சூரியனும் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா நல்காரியும் நடித்து வந்தனர். இவர்கள் இருவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இந்த நாடகம் பெரிய அளவில் ஹிட்டானது. அர்ஜுன் மற்றும் ரோஜாவின் காட்சிகளுக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்கத் தொடங்கினர். மேலும் இந்த நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுவதால், இந்த சீரியலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஒருநாள் திடீரென சீரியல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் சிபு சூரியனும் பிரியங்கா நல்காரியும் இணைந்து ரோஜா பாகம் இரண்டில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் வேறு வேறு சேனலுக்கு சென்று விட்டனர். பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்கிற தொடரில் நடித்து வருகிறார். சிபு சூரியன் விஜய் தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  Vanitha மகள் கேட்ட கேள்வி..ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து தானே வெளிய வந்தீங்க?

யாருமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டது ஏன்? உண்மைகளை உடைத்த ரோஜா சீரியல் நடிகை.! 3
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பிரியங்கா நல்காரி தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில் அவர் பிரியங்கா நல்கரியை கைவிட்டு விட்டார் என்கிற செய்தி பரவியது. ஆனால் அதே நபருடன் குடும்பத்தினர் நண்பர்கள் யாரும் இல்லாமல் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்டிருந்தார் பிரியங்கா. தற்போது அது குறித்து அவர் விளக்கம் அளித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment