இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். தற்போது அந்த படத்தின் டைட்டிலை சிறிய டீசருடன் அறிவித்திருக்கின்றனர். தமிழில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். 90களில் தொடங்கி இன்று வரை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னால் அது இயக்குனர் சங்கர் மட்டுமே. தமிழ் ரசிகர்களுக்கு உலக அளவில் சினிமா அனுபவத்தை கொடுத்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அதிக பொருட்சளவில் எடுக்கப்படும் இவரது படங்கள் பிரமிக்க வைக்க இருக்கும். பல படங்களில் தனது சமூக அக்கறையும் வெளிப்படுத்தி வருகிறார் சங்கர். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களை வித்தியாசமான முறையில் தனது படங்களில் பயன்படுத்தி பிரம்மிக்க வைத்து இருக்கிறார். தமிழ் திரையுலகுக்கு மட்டுமில்லாமல் இந்திய திரை உலகிற்கே மிகப்பெரிய உந்து சக்தியாக இழந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சங்கர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய எந்திரன், 2.0 திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லாமல் எடுக்கப்பட்ட இந்த படங்கள் பல கோடிகளை வசூலாக வாரிக் குவித்து இருந்தது. தற்போது ஒரே சமயத்தில் சங்கர் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறார். முதல் படமாக உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இதன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தெலுங்கில் ராம்சரனுடன் இணைந்து rc15 என்கிற படத்திலும் பணியாற்றி வருகிறார். இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார், இந்த இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ராம்சரனுடன் சங்கர் இணைந்து உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படத்திற்கு “கேம் சேஞ்சர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை அறிவித்து சிறப்பு வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் பகிர்ந்து இருக்கிறது படக்குழு. இந்த படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருக்கிறார். ராம்சரனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகை அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். தமிழில் இந்த படத்தின் கதையை எழுத்தாளர் விவேக் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் சிறிய இடைவெளி எடுத்த இயக்குனர் தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி இருப்பதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் டீசரை நீங்களும் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Dil Raju