பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக ஜீவாவை அவர் கொஞ்சம் கொஞ்சமாக மனதை மாற்ற தொடங்கி இருக்கிறார். ஜீவா அதற்கு உடன்படுவாரா? இல்லை மாமனார் ஜனார்த்தனனை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவாரா? என்பது சில வாரங்களில் தெரிந்து விடும். இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எதிராகவும் தனது அண்ணன் தம்பிகளுக்கு எதிராகவும் ஜீவாவின் மனதை மாற்ற ஜனார்த்தனன் மிகவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது மூன்று துண்டுகளாக உடைந்து விட்டது. ஜீவா தனது அண்ணன் தம்பிகளுடன் கோபித்துக் கொண்டு தனது மாமனார் ஜனார்த்தனன் வீட்டில் வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடைசி தம்பி கண்ணனும் வீட்டிலிருந்து வெளியேறி விட மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜீவா தனது மாமனார் ஜனார்த்தனன் வீட்டில் வசித்து வருகிறார். ஜனார்த்தனன் எப்படியாவது தனது மருமகன் ஜீவாவை அவர்களது சொந்த அண்ணன் தம்பிகளுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனார்த்தனன் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் சில நாட்களாக சரியாக ஓடவில்லை. ஏதாவது செய்து சூப்பர் மார்க்கெட்டின் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று ஜீவாவிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஏதாவது அதிரடி ஆஃபர் என்று சொல்லி விளம்பரப்படுத்தலாமா என்று கேட்க ஜீவா அதற்கு வேண்டாம் அப்படி நாம் செய்தால் இங்கு சுற்றி இருக்கும் கடைகள் அனைத்தும் அடிவாங்கும் என்று கூறுகிறார். அவர் தனது அண்ணன் நடத்திவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மனதில் வைத்து தான் இது போல கூறுகிறார்.

இதைப் புரிந்து கொண்ட ஜனார்த்தனன் குன்னக்குடியில் இருக்கும் மற்ற கடைகள் பாதிக்கும் என்று இப்படி சொல்கிறீர்களா.? இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பாதிக்கும் என்று இப்படி சொல்கிறீர்களா? என்று கேட்ட, என் அண்ணன் தம்பிகள் மீது எனக்கு வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் என்றைக்குமே நன்றாக இருக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று கோபமாக பதிலளிக்கிறார். மேலும் இப்படி கூறிவிட்டு விருட்டென மாமனாரிடம் இருந்து எழுந்து செல்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மாமனாரின் உண்மை முகமும், சுயரூபமும் ஜீவாவிற்கு தெரிய வரும்போது அவர் தனது மாமனாரை விட்டு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television