ரோபோ ஷங்கரின் மனைவி தற்போது அவரது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து உருக்கமாக கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவர் உடல் எடை குறைந்து காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரோபோ சங்கர். இவர் தற்போது பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் பின்னணி பேசியும் வருகிறார். இவர் நடித்து கடந்த ஆண்டு யுத்த சட்டம், இரவின் நிழல், தி லெஜெண்ட், கோப்ரா ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பிகில் மற்றும் விருமன் ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் பங்கு பெற்றிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த வீடியோவை விஜய் டிவியின் பிரபலங்களாக இருந்த புகழ் மற்றும் பாலா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்த வீடியோ வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலானது தொடங்கியது முதல் ரோபோ சங்கர் மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த வீடியோவில் அவர் தனது வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த வனத்துறையினர் வீட்டில் இருந்த பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்திருந்தனர். பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் பொழுது அதனால் சுதந்திரமாக வெளியில் பறந்து செல்ல முடிவதில்லை. இதனால் இனப்பெருக்கம் தடைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பச்சை கிளிகள் இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பச்சை கிளிகளை வீட்டில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ ஷங்கரின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது. அதில் உடல் எடை மிகவும் குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயிருந்தார ரோபோ ஷங்கர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு விளக்கம் கொடுத்த ரோபோ ஷங்கர் மனைவி அவர் உடல்நிலைக்கு எந்த குறையும் இல்லை உணவு கட்டுப்பாட்டால் அவருக்கு உடல்நிலை மெலிந்து விட்டதாக விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். உன் விழி பார்த்த அந்த நிமிடம் முதல் நிகழ்காலமும் சரி,எதிர்காலமும் சரி அது உன்னோடு என்றே வாழ்கிறேன். ஆயிரம் உறவு அன்பு காட்டினாலும்,, உன் அன்பு இல்லையெனில் நான் ஒரு அனாதைதான் அன்பே என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரியில்லை என்று பலரும் வதந்திகளை கிளப்பிய நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television