திருப்பதி ஜெயிலில் இருந்து தப்பி சென்ற புஷ்பா..! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புஷ்பா 2 மினி டீஸர் இதோ

புஷ்பா 2 படத்தின் டீசர் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் டீசரை மினி ப்ரோமோ போல படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த புஷ்பா ஜெயிலில் இருந்து தப்பி ஓடி விட்டதாக தற்போது அந்த டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி தமிழ் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பகத் பாசிலுக்கு இந்த படம் முதல் தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்திய படமாக மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஜெயிலில் இருந்து தப்பி சென்ற புஷ்பா..! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புஷ்பா 2 மினி டீஸர் இதோ 1

விளம்பரம்

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். டிசம்பர் மாதம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் சேஷாசலம் மலைப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தை படக் குழு எடுத்து முடித்து இருக்கிறது. விரைவில் இரண்டாவது பாகமும் வெளியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் ஏழாம் தேதி படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது படத்தில் இருந்து மினி ப்ரோமோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கிறனர் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த டீசரில் திருப்பதி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த புஷ்பா தற்போது தப்பி ஓடிவிட்டது போல காட்டப்பட்டிருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பு மிகவும் எகிறி இருக்கிறது.

தொடர்புடையவை  ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் அனைத்திலும் பட்டையை கிளப்பிய சந்தானம்.! கிக் டீசர் இதோ.!

திருப்பதி ஜெயிலில் இருந்து தப்பி சென்ற புஷ்பா..! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புஷ்பா 2 மினி டீஸர் இதோ 3
படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பகத்ஃபாஸில் நடிக்க இருப்பதாகவும், போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்றை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த டீசரின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. டீசர் வருகிற ஏப்ரல் ஏழாம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாக இருப்பதாக படக் குழு அறிவித்திருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் இந்த டீசர் மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Mythri Movie Makers

விளம்பரம்

Leave a Comment