கணவரை பார்த்து தாத்தாவா? அப்பாவா? என்று கேக்குறாங்க.! கண்கலங்கி பேசிய நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி தற்போது ஒரு பேட்டியின் போது கண் கலங்கி பேசியிருக்கிறார். தான் தனது கணவருடன் வெளியில் செல்லும் பொழுது அவரைப் பார்த்து உங்களுடைய தாத்தாவா? என்று கேட்கிறார்கள் என்று அவர் கண் கலங்கி பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவர் மகன் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நீலிமா ராணி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். நீலிமா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடன் நடித்து வந்த அஸ்வின் என்பவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர். தற்போது நீலிமாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்க, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் சூட்டி இருந்தார் நீலிமா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவரை பார்த்து தாத்தாவா? அப்பாவா? என்று கேக்குறாங்க.! கண்கலங்கி பேசிய நீலிமா ராணி..! 1
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நீலிமா அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டில் தனது சொந்த ஊரில் வீடு கட்டும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது நீலிமா சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் 1947 படத்தில் நடித்திருக்கிறார். ஐந்து நிமிடம் மட்டுமே நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் அனைவரும் மனைவியும் கவர்ந்து வருகிறது. கௌதம் கார்த்திக் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நீலிமா. இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நீலிமா இயக்குனர் பொன்குமார் என்ற படத்துக்காக தன்னை அழைத்த போது, முக்கியமான கதாபாத்திரம், படம் வெளியான பின்பு அனைவரும் உங்களை பாராட்டுவார்கள் என்றார். உடனே எத்தனை நாள் கால் சீட் வேண்டும் என்று கேட்டேன். ஒரு நாள் போதும் என்று சொன்னார். அதை கேட்டதும் ஒரு நாளில் என்ன எடுப்பீர்கள்? என்று கேட்டேன், ஆனால் அரை நாளிலேயே எனது கதாபாத்திரத்தை எடுத்து முடித்து விட்டார் என்று நீலிமா கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீனாவையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமாக பேசிய விஜயா.! வெளுத்து வாங்கிய முத்து.!

கணவரை பார்த்து தாத்தாவா? அப்பாவா? என்று கேக்குறாங்க.! கண்கலங்கி பேசிய நீலிமா ராணி..! 3

 

விளம்பரம்

தொடர்ந்து பேசிய அவர், தான் கர்ப்பமாக இருந்த போது அம்மன் வேடத்தில் ஒரு போட்டோ ஷூட் செய்திருந்தேன். அதை பார்த்த பொண்குமார், இதே போல் ஒரு லட்சணமான முகம் வேண்டும் அம்மா என்று சொன்னதும் மனதிற்குள் ஒரு தாக்கம் வரவேண்டும் என்பதற்காக எனக்கு குழந்தை பிறக்கும் வரை காத்திருந்து தன்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார். இதை பார்த்துவிட்டு பலரும் பாராட்டும் பொழுது எனக்கு ஏதோ சாதித்தது போல் இருக்கிறது என்று பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய நீலிமா என் கணவரின் புகைப்படத்தை பார்த்து தாத்தாவா? அப்பாவா? தாத்தா கூட வெளியில் செல்கிறீர்களா என்று கேட்கிறார்கள்.என் கணவர் சால்ட் அன்ட் பெப்பர் தான். மற்றவர்களுக்காக அவர் டை அடித்து கொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை, நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ அப்படி இருக்கிறார் என்று கூறி கண்கலங்கி நீலிமா பேசினார். அவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  அரசே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது, லீவ் வேண்டும்..! விக்ரமை செல்லமாக கலாய்த்த கார்த்தி.!

Youtube Video Embed Code Credits: SS Music

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment