வீட்டு வேலைக்காரி எதுக்கு குடும்ப விஷயத்துக்குள்ள மூக்கை நுழைக்கிற?? செல்வியை அசிங்கப்படுத்திய ராதிகா.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செல்வியை வேலைக்காரி என்று ராதிகா திட்டியதால் கடுப்பான பாக்யா தற்போது ராதிகாவை வெளுத்து வாங்கி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பல கட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகனாக இருக்கும் கோபிக்கு பாக்யா ராதிகா என்று இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். பாக்யாவுடன் திருமணம் ஆகி, அவரின் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி, அவர்களும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது கோபி இரண்டாவதாக தனது கல்லூரி கால தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ராதிகாவை திருமணம் செய்த நாள் தொடங்கி அவருக்கு மன நிம்மதி இல்லை. வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. ராதிகாவிற்கும் கோபிக்கும் சரியான புரிதல் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வேலைக்காரி எதுக்கு குடும்ப விஷயத்துக்குள்ள மூக்கை நுழைக்கிற?? செல்வியை அசிங்கப்படுத்திய ராதிகா.! 1
இதனால் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் மன நிம்மதியைத் தேடி கோபி அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். குடிப்பது மட்டுமில்லாமல் நடுரோட்டில் விழுந்தும் கிடக்கிறார். இதை தெரிந்து கொள்ளும் கோபியின் தாயார் அவரை எப்படியாவது இரண்டாவது மனைவி ராதிகாவிடமிருந்து பிரித்து தங்களது வீட்டிலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறார். கோபியின் பெற்றோர்கள் கோபி பிரிந்து சென்ற சூழ்நிலையிலும் தனது மருமகள் பாக்யாவுடன் தான் வசித்து வருகின்றனர். தாங்கள் உயிருடன் இருக்கும் வரை பாக்யா தான் தங்களின் மருமகள் என்றும் கோபியின் பெற்றோர் சபதம் எடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் கோபி ஒருமுறை ரோட்டில் விழுந்து கிடந்ததை பார்த்த கோபியின் மகன் செழியன் அவரை பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார். கோபியும் பாக்யாவின் வீட்டிலேயே தங்கி விடுகிறார். இதை தெரிந்து கொள்ளும் ராதிகா கோபியின் வீட்டிற்கு பெட்டி படுக்கையுடன் வந்து இனி நானும் இங்கேதான் இருக்கப் போகிறேன் என்று பிரச்சனையை ஆரம்பிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உடல் எடையை குறைத்த பின்பு வெறித்தனமாக டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் ஆல்யா.!

வீட்டு வேலைக்காரி எதுக்கு குடும்ப விஷயத்துக்குள்ள மூக்கை நுழைக்கிற?? செல்வியை அசிங்கப்படுத்திய ராதிகா.! 3
தற்போது கோபி ராதிகா இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் வசிக்கிறார்கள். தற்போது ஒவ்வொரு பிரச்சனையாக தொடங்க ஆரம்பிக்கிறது. ராதிகா தண்ணீர் பிடிப்பதற்காக பாக்யாவின் சமையலறைக்கு வருகிறார், அங்கு ஜெனி, அமிர்தா, செல்வி, பாக்யா என அனைவரும் இருக்கின்றனர். அப்போது செல்வி பாக்யாவிடம் உன் சமையல் கட்டுக்குள் யார் யாரோ வருகிறார்கள், அவர்களை வெளியே துரத்தி விடு அக்கா என்று பாக்யாவிடம் சொல்கிறார். அதற்கு நீ வேலைக்காரி தானே? வீட்டு வேலை செய்வதை மட்டும் பார் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று செல்வியை மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் கடுப்பான பாக்யா நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு துரோகம் செய்பவர்களை விட, வேலைக்காரியாக வந்து இன்றளவும் எனக்கு நண்பராக இருக்கும் செல்வியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்லி ராதிகாவின் முகத்தில் அடித்தார் போல் பேசுகிறார் பாக்யா. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment