பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ.!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் சீரியலில் இருந்து தற்போது விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இன்னும் 10 15 எபிசோடுகள் மட்டுமே தன்னுடைய பாகம் ஒளிபரப்பாகும் என்றும் அதன் பின்னர் நான் சீரியலில் இருந்து விலக இருக்கிறேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான். விஜய் தொலைக்காட்சியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இரு மனைவிகளுடன் போராடும் ஒரு கணவன் கதாபாத்திரமாக கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் சதீஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி கோபிக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவியை திருமணம் செய்த நாள் தொடங்கி கோபிக்கு மனநிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அவர் அளவுக்கு அதிகமாக குடிக்கிறார். மேலும் தனது மூத்த மனைவி பாக்யாவின் வீட்டிலேயே அவர் தஞ்சம் அடைகிறார். இதை தெரிந்து கொள்ளும் இரண்டாவது மனைவி ராதிகா, அங்கும் வந்து பிரச்சனை செய்கிறார். கோபி இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன். இனிமேல் இந்த வீட்டில் நான் தான் இருக்க வேண்டும், பாக்யா வெளியேற வேண்டும் என்று சண்டை இடுகிறார். ஆனால் பிரச்சனை தற்காலிகமாக ஓய்ந்து இருக்கிறது. பாக்கியா, ராதிகா, கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த பிரச்சனை எல்லாம் சமாளிக்க முடியாமல் பாக்யாவும் திணறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தற்போது சீரியலில் இருந்து விலகி விட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து நிரந்தரமாக விலக போறீங்களா? இனிமே தொகுத்து வழங்க மாட்டிங்களா? நச் என்று பதில் அளித்த கமல்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய கோபி.! அவரே வெளியிட்ட வீடியோ.! 3
நாடகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் கோபி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்தார். பலரும் கோபியை தனிப்பட்ட முறையில் தாக்குதலும் நடத்தி வந்தனர். பலமுறை வீடியோ வெளியிட்டு இது நாடகம், நாடகத்தை நாடகமாக பாருங்கள், தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்காதீர்கள் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தார். சமீபத்தில் அவர் தனக்கு ஓய்வு தேவை நாடகத்திலிருந்து சில நாட்கள் விலக இருப்பதாக சூசகமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்த விஜய் டிவிக்கு மிக்க நன்றி. தான் சீரியலில் இருந்து விலகி விட்டேன். 10, 15 எபிசோடுகள் மட்டுமே இனி ஒளிபரப்பாகும். இது உங்களுக்கு வருத்தத்தை, சந்தோஷத்தை, கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார். நீங்களும் அவரை வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment