தனது பிறந்தநாளை முன்னிட்டு வெட்டுக்கிளி பாலா செய்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது பிறந்த நாளை முன்னிட்டு உடல்நிலை சரியில்லாதவர்களுக்காகவும் முதியவர்களுக்காகவும் அவர் மிகப்பெரிய நற்பணி ஒன்றை செய்திருக்கிறார். அந்த செய்தி தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பாலா. ஸ்டாண்டப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் சீசன் 1 தொடங்கி சீசன் மூன்று வரை கோமாளியாக வந்தார் பாலா. இவரின் டைமிங் காமெடிகளுக்காகவும், அடுத்தவர்களை கலாய்த்து இவர் பேசும் வசனங்களுக்காகவுமே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாலாவிற்கு சில பட வாய்ப்புகளும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து விலகிய அவர், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் சில பட நிகழ்ச்சிகளையும், இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். பெரிய திரையில் இருக்கும் நடிகர்களுக்கே மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இல்லாத நிலையில் பாலா அதிலிருந்து முற்றும் வேறுபட்டவர். சின்னத்திரையில் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு இவர் 30 குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் முதியவர்களுக்காக ஒரு இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனக்கு கிடைக்கும் பணம் பொருள் என அனைத்தையும் இந்த குழந்தைகளின் படிப்பு மற்றும் முதியவர்களின் மருத்துவ செலவிற்காக செலவிட்டு வருகிறார் பாலா.

இந்த நிலையில் தற்போது பாலா தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதியை சுற்றி இருக்கும் முதியவர்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அந்த ஆம்புலன்ஸை அமுதவாணன் கையால் ஓட்டுநருக்கு வழங்கி இருக்கிறார். மேலும் நீண்ட நாட்களாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், ரொம்ப நாட்களாக காசு இல்லை, தற்போது உங்களின் ஆதரவாய் நான் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன். இதனால் சொந்த காசில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து விட்டேன். இதற்கு பின்னர் பெரியவர்கள் செக் அப்பிற்கு ஆட்டோவில் போக வேண்டாம், ஆம்புலன்ஸ்-ல் போகலாம். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளை சுற்றி இருப்பவர்கள் இந்த இலவச ஆம்புலம்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாலா அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O