உனக்கு நேர்வழியே தெரியாதா? கம்பெனி பேர கெடுக்கப் பாக்குறியா? அர்ஜீனைத் திட்டிய கோதை

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் முறையாக கோதை தனது மருமகன் அர்ஜுன் மீது சந்தேகப்படுகிறார். மேலும் நேர் வழி என்றால் உங்களுக்கு என்னவென்றே தெரியாதா? எப்போதும் குறுக்கு வழியிலேயே செல்ல முயற்சிக்கிறீர்களே? என்று சொல்லி அர்ஜுனிடம் கோபமாக பேசுகிறார் கோதை. தமிழும் சரஸ்வதியும் தொடரை பொருத்தவரை கோதை இண்டஸ்ட்ரீஸ் என்கிற மிகப்பெரிய நிறுவனத்தை கோதையும் அவரது கணவர் நடேசன் இணைந்து நடத்தி வருகின்றனர். அவர்களுக்குப் பிறகு அவர்களது மகன்கள் தமிழ் மற்றும் கார்த்திக் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். கோதையின் குடும்ப எதிரியாக இருக்கும் அர்ஜுன் இந்த குடும்பத்தில் புகுந்து எப்படியாவது இந்த நிறுவனத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தமிழின் தங்கை ராகிணியை திருமணம் செய்து கொண்டு இந்த குடும்பத்திற்குள் நுழைகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு நேர்வழியே தெரியாதா? கம்பெனி பேர கெடுக்கப் பாக்குறியா? அர்ஜீனைத் திட்டிய கோதை 1

விளம்பரம்

பின்ன ஒரு வழியாக கோதையின் மூத்த மகன் தமிழை கோதையின் கையாலேயே வீட்டிலிருந்து விரட்டி அடிக்கும்படி செய்து விடுகிறார். அதன் பின்னர் பல நிகழ்வுகள் நடந்து முடிந்தது விடுகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நடந்த சேர்மன் தேர்தலில் தமிழும் கோதையும் எதிரெதிராக மோதினர். மொத்தம் பதிவான 250 வாக்குகளில் தமிழ் 148 வாங்கி கோதையை தோற்கடித்து இருக்கிறார். இதனால் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மனாக தற்போது பதவியேற்று இருக்கிறார் தமிழ். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோதை மற்றும் அர்ஜுனுக்கு இடையே மோதல் எழுந்துள்ளது. தங்களது நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் எடுப்பதற்கு நிறுவனங்களிடம் காசு கொடுத்தால் நமக்கு கண்டிப்பாக அந்த ஆர்டர் கிடைத்து விடும் என்று அர்ஜுன் குறுக்கு வழியில் கோதைக்கு அறிவுரை வழங்குகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கோதை தற்போது அர்ஜுனை சகட்டு மேனிக்கு திட்டுகிறார்.

தொடர்புடையவை  "எனக்கு வேற வழி தெரில ஆத்தா!" நெல்சன் உடம்போடு தன் தலையை Photoshop செய்துகொண்ட விக்னேஷ் சிவன்

உனக்கு நேர்வழியே தெரியாதா? கம்பெனி பேர கெடுக்கப் பாக்குறியா? அர்ஜீனைத் திட்டிய கோதை 3

விளம்பரம்

நேர்வழி என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டீர்களா? கம்பெனியின் நற்பெயரை கெடுக்க பார்க்கிறீர்களா? என்று சொல்லி அர்ஜுனை திட்டிவிட்டு செல்கிறார் கோதை. பின்பு நடேசனிடம் பேசும் கோதை, அர்ஜுன் பற்றி குறை கூறுகிறார். சில நாட்களாகவே அர்ஜுன் தப்பான வழியில் சென்று கொண்டிருப்பதாக நடேசனிடம் கூறி கொஞ்ச நாட்களாகவே இல்லை, ஆரம்பத்திலிருந்து அவர் அப்படித்தான் என்று சொல்லி கோதையின் மனதை மாற்றுகிறார். இதனால் கோதைக்கு அர்ஜுன் மீது பலமாக சந்தேகம் வருகிறது. இனி அர்ஜுன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நாம் கண்காணிக்க வேண்டும் என்று கோதை நடேசனிடம் கூறுகிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment