233வது படத்தை குட்டி டீசருடன் அறிவித்த கமல்..! இயக்குனர் யாருன்னு தெரியுமா? இதோ வீடியோ..!

நடிகர் கமலஹாசன் தற்போது தனது 233-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த அறிவிப்பை ஒரு குட்டி டீசருடன் தற்போது கமலஹாசனே தற்போது ஷேர் செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகத்திற்கும் நடிப்பு அரக்கனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தற்போது வரை சுமார் 230-க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கமலஹாசன் நடித்த இந்த படம் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்திற்க்குப் பின்னர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டும் விறுவிறுவென உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது கமலஹாசன் தனது 233 வது திரைப்படத்தை எச் வினோத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அதை ஒரு குட்டி டீசருடன் தற்போது கமல் வெளியிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  படத்தில் காவி கொடியை பறக்கவிட்ட மணிரத்னம் ஒரு ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்..மணிரத்னத்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

233வது படத்தை குட்டி டீசருடன் அறிவித்த கமல்..! இயக்குனர் யாருன்னு தெரியுமா? இதோ வீடியோ..! 1

விளம்பரம்

தமிழ் திரையுலங்கில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் எச்.வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்க்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்று பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அஜித்தை வைத்து மட்டுமே நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்று தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்தவர் எச் வினோத். வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை திறம்பட கையாண்டு மக்களுக்கு நல்ல படங்களை கொடுக்கும் ஒரு இயக்குனராக தற்போது எச். வினோத் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாகவே எச்.வினோத் கமலுடன் இணைந்து தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி கொண்டு இருந்தது. கமலும் வினோத்தும் விவசாயிகளை இணைந்து சந்தித்து இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியான போதே இவர்கள் இருவரும் இணைந்து ப்ராஜெக்ட் செய்யப் போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வரத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக கமல் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  மொக்க படம்.! ஒரு சீன் கூட நல்லா இல்ல.! படம் வரத்துக்கு முன்னாடியே Flop ஆயிடுச்சு.! ப்ளூ சட்டை விமர்சனம்.!

233வது படத்தை குட்டி டீசருடன் அறிவித்த கமல்..! இயக்குனர் யாருன்னு தெரியுமா? இதோ வீடியோ..! 3

விளம்பரம்

அந்த வீடியோவில் எச் வினோத் கமலின் 233 வது படத்தில் இணைய இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் ப்ராஜெக்ட் K திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல். பின்னர் மணிரத்னத்துடன் இணைந்து 232வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின்னர் வினோத்துடன் இணைந்து 233 வது படத்தில் நடிக்க இருக்கிறார். ரைஸ் டு ரூல் (Rise to Rule) என்ற வாசகத்துடன் கமல் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். எனவே இந்த படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்க கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது கமல் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: 

விளம்பரம்

Leave a Comment