“உன்னை ஒரு நாள் சந்திப்பேன் அம்மா.!” மஞ்சுளா பிறந்தநாளில் உருக்கமான பதிவிட்ட வனிதா விஜயகுமார்.!

மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வனிதா விஜயகுமார் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக இருந்து வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர்களாக இருக்கும் விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள்தான் வனிதா. இவர் சின்னத்திரை நடிகர் ஆகாஷை முதலாவதாக திருமணம் செய்து கொண்டு அந்த தம்பதிகளுக்கு விஜய் ஸ்ரீஹரி என்கிற மகன் இருக்கிறார். ஆகாஷ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகத்தை செய்துவிட்டு இரண்டாவதாக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவருடனும் விவாகரத்து ஆனது. பின்னர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அதுவும் முடிவுக்கு வந்து இறுதியாக பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருந்தார். அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் பீட்டர் பாலும் சமீபத்தில் இறந்து போனார்.

தொடர்புடையவை  "திடீரென உயிரிழக்கும் முக்கிய கதாபாத்திரம்....பயங்கர ட்விஸ்ட் கொடுக்க ரெடியாகும் சீரியல்"!!

"உன்னை ஒரு நாள் சந்திப்பேன் அம்மா.!" மஞ்சுளா பிறந்தநாளில் உருக்கமான பதிவிட்ட வனிதா விஜயகுமார்.! 1

விளம்பரம்

ஆரம்பத்திலிருந்து தனது தாய் தந்தை சகோதர சகோதரிகள் அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், தற்போது தனது மூத்த மகளுடன் தனியாக வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட வனிதாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் தான். பிக்பாஸ்க்குப் பின்னர் தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும் நபராக வனிதா இருந்து வருகிறார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது இறந்து போன தனது தாயார் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பிரபல நடிகை மஞ்சுளா இறந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வனிதா தனது தாயாருடன் இருக்கும் பல புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

"உன்னை ஒரு நாள் சந்திப்பேன் அம்மா.!" மஞ்சுளா பிறந்தநாளில் உருக்கமான பதிவிட்ட வனிதா விஜயகுமார்.! 3

விளம்பரம்

அதில் அவர், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா, பத்து வருடங்கள் ஆகியும் உன்னை பற்றி நினைப்பதை இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை. நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும் உன்னை போலவே நான் எப்படி வளர்ந்தேன் என்பதையும் என்னால் மறக்க முடியவில்லை. நீ இருக்கும் இடத்தில் நிம்மதியாக இருக்கிறாய் என்பதையும், நீ என்னை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் நான் அறிவேன். நீ என்னுடைய ஸ்கிரீன் சேவர் மற்றும் வால்பேப்பர். உன்னைப் பற்றி எழுதும் பொழுது என்னுடைய கண்ணீர் கன்னங்கள் வழியாக உருண்டு ஓடுகிறது. என்னுடைய ஆழ்மனதிலிருந்து உனக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எப்படி தனியாகவும், ஒருவரை சார்ந்தும் இல்லாமல் வாழ எனக்கு கற்றுக் கொடுத்ததற்காக உனக்கு நான் நன்றி சொல்கிறேன். உன்னை நான் ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்கிறேன். உன்னை நான் தினமும் மிஸ் செய்து கொண்டே இருப்பேன். ஒருநாள் உன்னை சந்திக்கிறேன், அதுவரை உன்னை மிஸ் செய்வேன் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். !

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment