இந்த காதலும் கசந்து விட்டதா? தனது 3வது மனைவியை பிரியும் பவன் கல்யாண்? தீயாக பரவும் தகவல்.!

தெலுங்கு உலகின் டாப் நடிகராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பவர்ஸ்டார் பவன் கல்யாண் தெலுங்கு திரை உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். நடிகர் என்பதை தாண்டி பிரபல அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சொந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் என்று தனது பேரிலேயே கல்யாணத்தை வைத்திருக்கும் அவரது வாழ்க்கையில் கல்யாணம் என்பது கசப்பானதாக அமைந்திருக்கிறது. அவரது மூன்றாவது மனைவியும் ரஷ்ய மாடலுமான “ஆணா”வும் சில காலமாகவே ஒன்றாக வாழவில்லை என்றும், தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், பவன் கல்யாண் குடும்ப நிகழ்ச்சிகளில் ஆணா கலந்து கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் அவர்கள் விரைவில் விவாகரத்து வாங்கி பிரிய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த காதலும் கசந்து விட்டதா? தனது 3வது மனைவியை பிரியும் பவன் கல்யாண்? தீயாக பரவும் தகவல்.! 1
1996 ஆம் ஆண்டு வெளியான “அக்கட அம்மாயி இக்கட அப்பாயி” என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் பவன் கல்யாண். 30 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அவர் தற்போது ப்ரோ, ஹரிஹர வீரமல்லூ, ஓ.ஜி என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார் .ஜனசேனா என்கிற கட்சியை தொடங்கிய அவர் தற்போது அதன் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு முதலில் நந்தினி என்கிற பெண்ணிடம் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவருடன் 1997 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. பின்னர் ரேணு தேசாய் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்திருந்தார் பவன் கல்யாண். இந்த நிலையில் அவருக்கு ரஷ்ய மாடலான ஆணா என்பவருடன் 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு போலினோ அஞ்சனா மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  படத்தில் இருந்து முதல் ப்ரோமோ வெளியானது.! வந்தியத்தேவன் காட்சிகளை முதல் ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு

இந்த காதலும் கசந்து விட்டதா? தனது 3வது மனைவியை பிரியும் பவன் கல்யாண்? தீயாக பரவும் தகவல்.! 3
இந்த நிலையில் பவன் கல்யாணின் மூன்றாவது காதலும் கசந்துவிட்டதாக கூறப்படுகிறது. பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியான ஆணாவை பிரிய இருக்கிறார் என்கிற செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து பவன் கல்யாணும், அவரது மனைவி ஆணாவும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். பவன் கல்யாணின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஆணா தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. பவன் கல்யாண் விரைவில் தனது மூன்றாவது மனைவியையும் அதிகாரப்பூர்வதாக விவாகரத்து செய்வார் என்ற செய்தி டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Leave a Comment