குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகளை நடுவர்கள் தற்போது கொடுத்திருக்கின்றனர். இன்று நடந்த அரையிறுதி சுற்றில் பல திருப்பங்கள் நடைபெற்றிருக்கிறது. உலக மக்கள் பலரும் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் நிம்மதியை அளித்த இந்த நிகழ்ச்சி தற்போது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனையும் விரைவில் முடிக்க இருக்கிறது. தற்போது இந்த சீசனில் இறுதி அரையிறுதி சுற்று நடைபெற்றிருக்கிறது. இதில் பல திருப்பங்களை நடுவர்கள் கொடுத்திருக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சுற்றில் விசித்ரா முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் சிவாங்கி, சிருஷ்டி, மைம் கோபி, கிரண் என மொத்தம் நான்கு பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் நான்கு பேருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.

அதற்கேற்றார் போல் நடுவர்களும் மீன் முட்டை, தேயிலை, கல்லீரல், கூனைப்பூ போன்ற பல வித்தியாசமான பொருட்களை கொடுத்து குக்குகளை சமைக்க அறிவுறுத்தி இருந்தனர். மேலும் ஒவ்வொரு குக்குகளுக்கும் இரண்டு கோமாளிகளை கொடுத்து ஒவ்வொருவருக்கும் மூன்று தடைகளையும் கொடுத்திருந்தனர். இதனால் இந்த வாரம் சுவாரஸ்யம் மற்றும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நான்கு பேரில் இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபியை நடுவர்கள் தேர்வு செய்திருந்தனர். அதன் பின்னர் சிவாங்கி, சிருஷ்டி மற்றும் கிரண் ஆகிய மூன்று பேர் மட்டுமே மீதமிருந்த நிலையில் சிவாங்கியை மூன்றாவது பைனலிஸ்டாகவும் சிருஷ்டியை நான்காவது பைனலிஸ்ட்டாகவும் நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர் ஐந்தாவதாக கிரண் எலிமினேட் செய்யப்பட்டு அடுத்த வாரம் நடைபெறும் வைல்டு கார்டு குக்கிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பத்தை நடுவர்கள் அறிவித்தனர்.

அதில் கிரண் வைல்ட் கார்டு என்ட்ரிக்கே போகத் தேவையில்லை. அவர் ஐந்தாவது பைனலிஸ்ட்டாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறி அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். இதனால் விசித்ரா, சிவாங்கி, சிருஷ்டி, மைம் கோபி, கிரண் ஆகிய ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் வைல்ட் கார்டு என்ட்ரி எபிசோடுகள் சூட்டிங் தற்போது நிறைவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் ஆகி வெளியேறிய ஆண்ட்ரியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இறுதிப் போட்டிக்கு விசித்ரா, சிவாங்கி, ஸ்ருஷ்டி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் குக் வித் கோமாளி சீசன் 4 பிரம்மாண்டமாக நிறைவடைய இருக்கிறது என்ற செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.