கயல் சீரியல் நடிகை அபிநவ்யா தனக்கு ஆண் குழந்தையை முதல் முறையாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளுக்கும் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் தீபக் மகனை தூக்கி வைத்திருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு மகனுக்கு துருவன் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபிநவ்யா.

செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். தற்போது இவர் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர் நடித்து வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அபிநவ்யாவுக்கும் சீரியல் நடிகர் தீபக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தீபக்கும் அபியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீபக் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் என்றென்றும் புன்னகை என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது அவர் ஈரமான ரோஜாவே சீசன் 2 விலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி அபி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருந்தார். அபி கர்ப்பமாக இருந்ததால் கயல் சீரியலை விட்டு விலகி இருந்தார் அபிநவ்யா. இந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்து இருந்தார். தனது கணவர் தீபக் மகனை தூக்கி வைத்திருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு மகனுக்கு துருவன் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக தனது மகனின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர் அபி தீபக் தம்பதிகள். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அபியை அப்படியே உரித்து வைத்து இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.