கண்ணம்மாவை அடிக்க பாய்ந்த சௌந்தர்யா..! தடுத்து நிறுத்திய பாரதி.! வேற லெவல் ப்ரோமோ.!

பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சௌந்தர்யாவின் பேச்சை மீறி பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டதால், இனி தன் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சௌந்தர்யா பாரதிக்கு சாபம் விட்டுவிட்டு செல்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பாரதி கண்ணம்மா சீசன் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் சற்று சுணக்கமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. சிறைக் கைதியாக வந்த சித்ரா கண்ணம்மா என்று பொய் சொல்லி கண்ணம்மா வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு அவர் நான் தான் கண்ணம்மா என்று சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மாவின் சிறு வயது நண்பர் பாரதி, சித்ராவை கண்ணம்மா என்று நம்பி அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார். நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மாவை அடிக்க பாய்ந்த சௌந்தர்யா..! தடுத்து நிறுத்திய பாரதி.! வேற லெவல் ப்ரோமோ.! 1
இந்த நிலையில் கண்ணம்மாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கண்ணம்மாவிடம் பாரதி கூற, தான் கண்ணம்மாவே இல்லை, தான் சித்ரா என்கிற உண்மையை பாரதியிடம் கூறுகிறார். இருந்த போதிலும் கண்ணம்மாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி கண்ணம்மாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பாரதி. முன்பாக அவரது அத்தை மகள் வெண்பாவுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில வெண்பா முகத்தில் கரியை பூசி விட்டு கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெறுகிறது. இந்த செய்தியை கேட்டு சௌந்தர்யா, வெண்பா மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடி வருகின்றனர். அதற்குள்ளாக கண்ணம்மாவின் கழுத்தில் பாரதி தாலிகட்டுகிறார். அப்போது அங்கு வரும் சௌந்தர்யா பாரதியை சகட்டுமேனிக்கு திட்டுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீயெல்லாம் ஒரு அப்பாவா? உன் மூஞ்சிய கூட பாக்க புடிக்கல.! பாரதியை திட்டி தீர்த்த குழந்தைகள்

கண்ணம்மாவை அடிக்க பாய்ந்த சௌந்தர்யா..! தடுத்து நிறுத்திய பாரதி.! வேற லெவல் ப்ரோமோ.! 3
மேலும் கண்ணம்மாவை அடிக்க போன சௌந்தர்யாவின் கையைப் பிடித்து பாரதி கண்ணம்மா இனி என் மனைவி என்று பேசுகிறார். இதைக் கேட்ட சௌந்தர்யா இனி நீ எனக்கு மகனே இல்லை என் முகத்தில் முழிக்காதே என்று சொல்லி விட்டு கோபமாக செல்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment