சமூக ஆர்வலருடன் சண்டை பிடித்த Coimbatore பஸ் டிரைவர் ஷர்மிளா.! வேடிக்கை பார்த்த ஆவுடையப்பன்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழா தமிழா நிகழ்ச்சி தற்போது புதுப்பொலிவுடன் மிகப்பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் நாளே மிகப்பெரிய சண்டை உருவாகியிருக்கிறது. பெண்கள் சுதந்திரம் குறித்தும் சுதந்திரம் கொடுத்ததால் பெண்கள் சீரழிகிறார்கள் என்று விவாதம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அமைச்சர் கீதாஜீவன், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, நடன இயக்குனர் சாந்தி மாஸ்டர், நடிகை ரேகா நாயர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்து வரும் கோயம்புத்தூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவும் கலந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலருடன் சண்டை பிடித்த Coimbatore பஸ் டிரைவர் ஷர்மிளா.! வேடிக்கை பார்த்த ஆவுடையப்பன்.! 1
இந்த நிகழ்ச்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கரு பழனியப்பன் விலகி இருந்த நிலையில் தற்போது புதிய தொகுப்பாளராக தனியார் தொலைக்காட்சி ஊடகம. ஒன்றில் நெறியாளராக பணியாற்றி வந்த ஆவுடையப்பன் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் முதல் தலைப்பாக பெண்கள் சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது போதுமானதாக இல்லை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது அதில் பங்கெடுத்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் பெண்களை நுகர்வு பொருளாக தான் பார்க்கிறீர்கள் அவர்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இல்லை என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறிக்கிட்ட கோயம்புத்தூர் பெண் ஓட்டுனர் ஷர்மிளா இங்கு அனைவருக்கும் காது கேட்கும் அதனால் நீங்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக வேண்டிய தேவை இல்லை என்று அவர் வாயை அடக்கி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மயூவுக்கு நடக்கும் பூப்புனித நீராட்டு விழா.! கண்கலங்கி அழும் கோபி.! இன்றைய ப்ரோமோ.!

சமூக ஆர்வலருடன் சண்டை பிடித்த Coimbatore பஸ் டிரைவர் ஷர்மிளா.! வேடிக்கை பார்த்த ஆவுடையப்பன்.! 3

இவர்கள் இருவருக்கிடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் ஆவுடையப்பன் முழித்துக் கொண்டிருப்பது போன்ற ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment